உங்கள் பூஜை அறையில் பல்லி இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம்? என்ன தெரியுமா
பொதுவாக, வீடுகளில் பல்லி நடமாட்டம் கட்டாயம் இருக்கும். அந்த வகையில், எல்லோரும் பல்லி வீட்டில் இருப்பதை விரும்புவதில்லை. உடனடியாக அகற்றி விட வேண்டும் என்று நினைப்பார்கள். சாஸ்திர ரீதியாக பல்லி இருக்கக்கூடிய இடம் நமக்கு நிறைய விஷயங்களை சொல்கிறது.
அப்படியாக, பூஜை அறையில் பல்லி இருந்தால் நல்லதா? கெட்டதா என்பதை பற்றி பார்ப்போம். நம்முடைய பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லி தென்பட்டால் அது மிகவும் அதிர்ஷ்டகரமான அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

பல்லி வீட்டினுடைய மகிழ்ச்சியையும் செல்வத்தையும் நமக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பது ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது. பல்லி பூஜை அறையில் இருப்பது நமக்கு எதிர்காலத்தில் நல்ல பண வரவையும், செல்வ செழிப்பையும் உண்டாக்குவதற்கு ஒரு அறிகுறியாகவும் கூறப்படுகிறது.
கோயில்களில் பபல்லியை பார்ப்பது நாம் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு உதவுகிறது. அதேபோல், மகிழ்ச்சி மற்றும் செல்வ செழிப்பை அது கொண்டு வந்து சேர்க்கிறது.
ஆக,வீடுகளில் நம்மை சுற்றி நடக்கக்கூடிய பல விஷயங்கள் நம் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புகளுடனும் சாஸ்திர ரீதியாக சில அர்த்தங்கள் நிறைந்ததாக இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |