இன்றைய ஆங்கில புத்தாண்டு ராசி பலன்(01.01.2025)

Report

மேஷம்:

இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும்.சொந்தங்கள் வருகையால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.சந்தோஷமான நாள்.

ரிஷபம்:

குடும்பத்தில் உண்டான நெருக்கடிகள் விலகும்.எதையும் சாதிக்கலாம் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.தாய் வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள்.இறை வழிபாடு நன்மை வழங்கும்.

மிதுனம்:

குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள்.தந்தை வழியில் உருவான பிரச்சனை தீர்விற்கு வரும்.உடன் பிறந்தவர்கள் உங்களை பற்றி புரிந்து கொள்வார்கள்.பிறர் ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நல்லது.

கடகம்:

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். பொன் பொருள் சேரும்.

சிம்மம்:

நீண்ட நாள் உங்களுக்கு சங்கடம் கொடுத்த பகைவர்கள் விலகி செல்வார்கள்.உடல் நிலையில் உருவான சங்கடம் விலகும்.வியாபாரத்தை விரிவு படுத்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

கன்னி:

வியாபாரத்தில் இருந்த தடைகளைக் கண்டறிந்து சரிசெய்வீர். குடும்பத்தினர் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்.உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.இனிமையான நாள்.

2025 லட்சுமி நாராயணன் யோகம்:பணமழை எந்த ராசிக்கு?

2025 லட்சுமி நாராயணன் யோகம்:பணமழை எந்த ராசிக்கு?

துலாம்:

கடந்த காலம் நடந்த பிரச்சனை எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்.ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.தாய் தந்தை வழி உறவுகள் உறுதுணையாக இருப்பார்கள்.சந்தோஷமான நாள்.

விருச்சிகம்:

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர்.எதையும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து செயல்பட வேண்டும்.

தனுசு:

கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.மனதில் உள்ள கவலைகள் மறையும்.சந்தோஷமாக வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள்.பிடிக்காதவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நன்மை தரும்.

மகரம்:

வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள் திறமை வெளிப்படும். நீண்டநாள் பிரச்னைகளை பேசித்தீர்ப்பீர்கள். குடும்பத்தினர் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்:

வியாபாரம் விருத்தியாகும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நீண்டநாள் கனவு பூர்த்தியாகும்.பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

மீனம்:

இன்று மனதில் உற்சாகமும் ஆர்வமும் பிறக்கும்.இறைவழிபாட்டில் அதிக நாட்டம் செல்லும்.நண்பர்கள் சந்திப்பால் மனம் மகிழ்ச்சி அடையும்.உடல்நலனில் சிறுது அக்கறை செலுத்த வேண்டும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US