நவராத்திரிவிழா ஒன்பது நாட்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்
நவராத்திரி கொண்டாட்டம் ஆரம்பம் ஆக போகிறது.தெய்வீக பெண் தன்மையின் 3 குணங்களான சக்தி, வளம் மற்றும் ஞானம் ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு திருவிழா. நவராத்திரி என்பது தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்பது சக்தி வாய்ந்த இரவுகள் ஆகும்.
நவராத்திரி ஆனது மகாளய அமாவாசைக்கு அடுத்து பத்து நாட்களில் கொண்டாடப்படும். அதாவது அக்டோபர் இரண்டாம் தேதி மகாளய அமாவாசை வருகிறது. இதற்கு அடுத்த நாளான அதாவது, அக்டோபர் 3ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை வரை நவராத்திரி கொண்டாடப்பட உள்ளது.
இதற்கிடையில் அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை வருகிறது.அப்படியாக பலரும் வீட்டில் கொலு வைத்து வழிபாடு செய்வார்கள்.அந்த வகையில் கொலுவோடு சேர்த்து வீட்டில் ஒன்பது நாளும் நாம் படிக்கவேண்டிய பிரசாதங்களை பற்றி பார்ப்போம்.
• முதல் நாள் – வெண்பொங்கல்
இரண்டாம் நாள் – புளியோதரை
மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
ஐந்தாம் நாள் – ததியோதனம் (தயிர்சாதம்)
ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
எட்டாம் நாள் – பாயஸான்னம்
ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில்
ஒன்பது நாள்களும் அம்பாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய பழங்கள்:
முதல் நாள் – வாழைப்பழம்
இரண்டாம் நாள் – மாம்பழம்
மூன்றாம் நாள் – பலாப்பழம்
நான்காம் நாள் – கொய்யாப்பழம்
ஐந்தாம் நாள் – மாதுளை
ஆறாம் நாள் – ஆரஞ்சு
ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்
எட்டாம் நாள் – திராட்சை
ஒன்பதாம் நாள் – நாவல் பழம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |