வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றிக்காகவே பிறந்த ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாழ்க்கையில் வெற்றி
பொதுவாக வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் ஒட்டுமொத்த மனிதர்களுக்குள்ளும் இருக்கும்.
இதற்காக தான் செய்ய வேண்டிய செயல்கள் என்ன என்பதை திட்டமிட்டு, அதன்படி முயற்சி செய்து வெற்றியை அடைபவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
ஆனால் ஒரு சிலர் வெற்றியை மட்டுமே தனது குறிக்கோளாக வைத்து அதற்காக தீவிர முயற்சியினை எடுத்து முன்னேருவார்கள். இப்படிப்பட்ட குணம் ஒரு சில ராசியினரிடமும் இருக்கின்றது.
ஆம் ஜோதிடத்தின் படி ஒருவரது ராசியினை வைத்து அவர்களின் சுபாவம், எதிர்காலம், கடந்த காலம் இவற்றினை எளிதாக கூறிவிட முடியும்.
அந்த வகையில் என்னதான் மற்றவர்கள் போட்டி போட்டாலும் ஜெயிக்கவே முடியாத சில ராசியினர் இருக்கின்றனர். இவர்கள் வாழ்க்கையில் வெற்றிக்காகவே பிறந்தவர்கள் என்று கூட கூறலாம்.
அவர்கள் எந்தெந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
வெற்றியை மட்டுமே மனதில் சிந்தித்து கொண்டிருப்பதில் விருச்சிக ராசியினர் உள்ளனர். இவர்கள் விடாமுயற்சி, தீவிர தன்மை இவர்களை வெற்றியின் பாதையில் எளிதாக கொண்டு செல்கின்றது.
அதாவது தன்னை சுற்றியிருக்கும் போட்டியாளர்களை எவ்வாறு வீழ்த்தலாம் என்ற சிந்தனையுடனும், அதற்காக செயல் முறையிலும் இருக்கும் இவர்களை யாராலும் வீழ்த்த முடியாது. மனதை ஒருநிலைப்படுத்தி கடுமையான போட்டியாளராக செயல்படுவார்கள்.
ரிஷபம்
எந்தவொரு செயலிலும் அவசரம் இல்லாமல் நிதானமாக செயல்படுவதே ரிஷப ராசியினரின் பலமாகும். கடுமையான போட்டி உணர்வு கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் வெளித்தோற்றத்திற்கு அவ்வாறு தெரிய மாட்டார்கள்.
கடின உழைப்பிற்கு எந்தநேரத்திலும் தயாராக இருப்பதுடன், விடாமுயற்சியும் இவர்களின் வெற்றிக்கு முக்கிய படிக்கல்லாக இருக்கின்றது.
எதையும் எளிதாக விட்டுக்கொடுக்க விரும்பாத இவர்கள் தனது வெற்றிக்கான இலக்கை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பதுடன், தன்னை யாராலும் ஜெயிக்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசியினரை குரு பகவான் ஆள்வதால், எந்தவொரு போட்டிக்கும் இவர்கள் பின்வாங்குவதே கிடையாதாம்.
சவால்களை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வதுடன், தனக்கான புதிய அனுபவத்தை எப்பொழுதும் தேடிக் கொண்டே இருப்பார்கள்.
தனக்கென ஒரு எல்லையை வைத்துக்கொண்டு இருப்பவர்களாக தனுசு ராசியினர் இருப்பதில்லை. தனது வாழ்க்கையின் வெற்றிக்காக தங்களது திறமைகளை எப்பொழுதும் சோதிக்கவே விரும்புவார்கள்.
தனது பலம் மற்றும் பலவீனத்தை எப்பொழுதும் ஆராய்ந்து கொண்டிருக்கும் இவர்கள், ஆபத்தை எதிர்கொள்வதிலும் தயங்க மாட்டார்கள். ஏனெனில் இவர்களின் குறிக்கோள் வெற்றியின் மீது தான் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினர் சூரியனால் ஆளப்படும் நிலையில், வாழ்க்கை முழுவதும் சூரியனைப் போலவே பிரகாசத்துடன் இருப்பார்கள். இவர்களின் ஆளுமை எதிலும் வெற்றியை மட்டுமே தக்க வைக்கின்றது.
மேலும் மற்றவர்களின் பாராட்டு, அங்கீகாரத்தினையும் விரும்புவதுடன், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் இவை இரண்டிலும் சவால்களையும், போட்டிகளையும் எளிதாக சமாளிப்பார்கள்.
எதிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணமும், தன்னம்பிக்கையும் அதிகம் உள்ளதால், தங்களது திறமையினை வெளிப்படுத்தி வெற்றியை எப்பொழுதும் தக்கவைத்துக் கொண்டே இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







