நோய் தீர்க்கும் பழனி பஞ்சாமிர்ததின் மகிமை!

By Vinoja Jan 05, 2026 08:14 AM GMT
Report

ஏழாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்து மதத்துக்கு உலகம் முழுவதும் கோவில்கள் காணப்படுகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்து மதத்தில் பெரும்பாலான இந்து கடவுள்கள் ஏதோ ஒரு விருப்பமான உணவுடன் தொடர்புடையவர்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.

பொதுவாக, சுவாமிக்கு படைக்கும் நைவேத்திய உணவு வகைகள் அந்தந்த கோயிலுக்கு உரிய வழக்கமான ஒழுங்குமுறைப்படி தயார் செய்யப்பட்டு பின்பு தெய்வங்களுக்குப் படைக்கப்படுட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றது.

நோய் தீர்க்கும் பழனி பஞ்சாமிர்ததின் மகிமை! | Not Just A Prasadam Medicine Palani Panchamirtham

திருப்பதி கோவில் லட்டு, திருப்புல்லாணி பாயசம், மதுரை அழகர் கோவில் சம்பா தோசை போன்றவை பிரசித்தி பெற்ற பிரசாதங்களாக அறியப்படுகின்றது. அந்தவகையில் உலக புகழ் பெற்ற பழனி பஞ்சாமிர்தம் பக்தர்களிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமாக உண்மைகள் குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

பழனி பஞ்சாமிர்தம்

விளைச்சல் தரக்கூடிய நிலத்தை குறிப்பிடும் சொல்லான ‘பழனம்’ என்ற பழைய சொல்லிலிருந்து ‘பழம்’ என்ற சொல் வந்தது. ஆகவே, நன்கு விளைச்சல் தரக்கூடிய பகுதியில் அமைந்துள்ள இடமாக பழனி இருக்கிறது.

நோய் தீர்க்கும் பழனி பஞ்சாமிர்ததின் மகிமை! | Not Just A Prasadam Medicine Palani Panchamirtham

முருகப்பெருமானை அவருடைய தாய், தந்தையர்களான சிவனும், பார்வதியும் 'ஞானப்பழம் நீ' என்று அழைத்ததால்' பழம் நீ என வழங்கப்பெற்று பிறகு, 'பழனி' என மருவியதாகவும் வரலாறு குறிப்பிடுகின்றது.

அதேபோல, பழனியில் தரப்படும் பஞ்சாமிருதத்திற்கும் நிறைய மருத்துவ குணங்கள் காணப்படுகின்றது.  பச்சை மலை வாழைப்பழம், தேன், கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பேரிச்சம்பழம் ஆகிய 5 வகையான முக்கிய பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படுவதால், இதற்கு பஞ்சாமிர்தம் என்று பெயர் வந்ததுள்ளது.

இந்த 5 மூலப்பொருட்களுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இந்த பொருட்களுடன்,. கூடுதல் சுவைக்காக நெய், ஏலக்காய்யும் நேர்க்கப்படுகின்றது. அந்த பொருட்களின் ஐக்கியமானது சிறப்பான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

நோய் தீர்க்கும் பழனி பஞ்சாமிர்ததின் மகிமை! | Not Just A Prasadam Medicine Palani Panchamirtham

மேலும் கொட்டையில்லாத பேரிச்சம்பழம், விருப்பாச்சி வாழைப்பழங்கள் சிறிய அளவிலும் சேர்க்கப்படுகின்றன. பழனி மலையில் உள்ள ஒரு கிராமத்தின் பெயரான விருப்பாச்சி என்ற பெயரில் அழைக்கப்படும் விருப்பாச்சி வாழைப்பழத்தில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக இருந்து பஞ்சாமிர்தத்திற்கு அதீத சுவையை கொடுக்கின்றன.

எந்தவித செயற்கை பொருட்களும் சேர்க்காமல் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பழனி பஞ்சாமிர்தத்தை தயாரிக்கும்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட சேர்க்கப்படுவதில்லை என்பதுதான் அதன் தனித்துவமாக சிறப்பு.

இவ்வாறு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பல மாதங்கள் கூட கெட்டுப்போகாமல் இருப்பதுடன் இதனை உட்கொண்டால் பக்தர்களின் நோய் தீர்க்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US