500 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் வக்ரமாகும் சனி புதன்- கோடிகளை குவிக்கும் ராசிகள்
ஜோதிடம் என்பது கிரகங்களுடைய மாற்றங்களை வைத்து கணிக்க சொல்லக் கூடிய அற்புதமான கலையாகும். மேலும் கிரகங்கள் எவ்வாறு முன்னோக்கி செல்கிறதோ அதேப்போல் சில நேரங்களில் கிரகங்கள் பின்னோக்கி வக்ரமாக பயணம் செல்லும் நிலையும் இருக்கிறது. அந்த வகையில் சனிபகவான் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிலையில் இருந்து மாறி நேர் நிலையில் பயணம் செய்ய இருக்கிறார்.
அதேபோல் புதன் பகவானும் விருச்சிக ராசியில் நவம்பர் 17ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த மாற்றமானது பல்வேறு ராசிகளுக்கு பல தாக்குதல்களை கொடுக்ககூடும். ஆனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இந்த கிரக மாற்றமானது ஒரு மிகப்பெரிய அளவில் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல தாக்கத்தை கொடுப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த இரண்டு கிரகங்களுடைய மாற்றமானது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நிதானத்தையும் தெளிவையும் கொடுக்கப் போகிறது. அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு விஷயத்தை நோக்கி முடிவு செய்வதில் மிகவும் குழப்பமான நிலையில் இருக்கிறார்கள். அந்த குழப்பமானது விலகி அவர்களுக்கு ஒரு தெளிவான பாதையை இந்த கிரக பெயர்ச்சிகள் காட்டப் போகிறது. இவர்களுடைய எதிர்காலம் மற்றும் தொழில் வாழ்க்கைக்கு தேவையான எல்லா விஷயங்களை செய்யப் போகிறார்கள்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த கிரக மாற்றமானது அவர்களுடைய தொழில் வாழ்க்கையில் அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வெற்றி கிடைக்கப் போகிறது. இவர்களுடைய அனுபவங்கள் வாயிலாக தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் ஒரு வெற்றியையும் சாதனையும் படைக்க கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாகும். திருமண வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கு நல்ல விடை கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதையும் உயரக்கூடிய நாள்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இந்த கிரகம் மாற்றமானது முதலில் அவர்கள் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்களாக திருமணத்திற்கு வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் விலகி நல்ல வரன் அமைந்து திருமண வாழ்க்கை அமையும். பெற்றோர்கள் உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் முன்னேற்றமும் பெறுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |