30 வயசுக்கு மேல் ராஜாதான் நீங்க - எந்த தேதியில் பிறந்தீர்கள்?
பிறந்த தேதி மற்றும் வாழ்க்கை பாதை எண்ணின் அடிப்படையில்தான் எண் கணிதம் செயல்படுகிறது.
பிறந்த தேதி
வாழ்க்கை பாதை எண் என்பது ஒருவர் பிறந்த தேதியின் கூட்டுத்தொகையில் இருந்து பெறப்படும் ஒற்றை எண். அந்தவகையில் எந்த வாழ்க்கை பாதை எண்ணிற்கு 30 வயதிற்கு மேல் பணக்காரரராகும் யோகம் இருக்கிறது என்று பார்ப்போம்.

5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை புதன் கிரகம் ஆளுகிறது. இதன் கீழ் இருப்பவர்கள் சரியாக திட்டமிடுபவர்கள் ஆகவும் புத்திசாலியாகவும் இருப்பார்கள்.
வாழ்க்கை பாதை
எளிமையான குடும்பத்தில் பிறந்தாலும் புதனின் அருளால் அவர்கள் 30 வயதிற்கு மேல் பணக்காரர் ஆகும் யோகம் கிடைக்கும். புதிய சாகசங்கள், வாய்ப்புகளை தேட ஆர்வமாக இருப்பார்கள். சிக்கல்களை சுலபமாக சமாளிக்க திறன் இவர்களுக்கு உண்டு. நினைத்ததை சாதித்து முடிப்பார்கள்.

ஒரு லட்சியத்தை குறித்து விட்டால் அதை அர்ப்பணிப்புடன் பின் தொடர்ந்து செய்து முடிப்பார்கள். எப்பேர்ப்பட்ட சவால்கள் வந்தாலும் பின்வாங்க மாட்டார்களாம்.
வாழ்க்கை பாதை எண் 5 -யை கொண்டவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த எண்களில் ஒன்றாக கருதப்படுகிறது புத்திசாலித்தனம் வசிகரம் ஆய்வு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர்களாக விளங்குவார்கள்.