12 ராசிகளும் செய்யக்கூடிய முக்கியமான தவறுகள் என்ன தெரியுமா?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. 12 ராசிகளுக்கும் பல்வேறு நற்குணங்கள் இருந்தாலும் அவர்களிடம் ஒரு சில தீய குணங்கள் மிகப்பெரிய தவறாக மாறி விடுகிறது. அந்த வகையில், 12 ராசிகளும் அவர்கள் செய்யும் தவறுகளை பற்றியும் பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் நண்பர்கள் என்று வந்துவிட்டால் குடும்பத்தையே விட்டுக் கொடுத்து பேசி விடுவார்கள்.
ரிஷபம்:
இவர்கள் ஒரு முறை ஒரு முடிவை எடுத்து விட்டார்கள் என்றால் அதிலிருந்து பின்வாங்குவதே இல்லை.
மிதுனம்:
இவர்களுக்கு பிடித்தவர் எவ்வளவு தப்பு செய்தாலும் அதை கண்டிக்காமல் அமைதியாக இருப்பார்கள்.
கடகம்:
இவர்கள் தனக்கு வேண்டியது கிடைத்தால் போதும் வேறு எதுவும் இவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை.
சிம்மம்:
இவர்களுக்கு எது சரி என்று தெரியும். ஆனால் அதை சொல்ல வேண்டிய இடத்தில் இவர்கள் சொல்வதில்லை.

கன்னி:
இவர்களுக்கு யார் துணையாக இருந்தாலும் அவர்கள் தப்பே செய்தாலும் அவர்களுக்கு இவர்கள் துணை போவார்கள்.
துலாம்:
இவர்கள் சீரியஸாக பேச வேண்டிய இடத்தில் எப்பொழுதும் அமைதி காத்து விடுவார்கள்.
விருச்சிகம்:
இவர்களிடம் தப்பு செய்தவர்கள் மனதார மன்னிப்பு கேட்கும் வரை அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதில்லை.
தனுசு:
மற்றவர்களுக்கு தேடி சென்று உதவி செய்வார்கள். ஆனால், குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்.
மகரம்:
எல்லா விஷயங்களையும் சந்தேக கண்ணோடு பார்ப்பார்கள். சில சமயம் உண்மையையும் இவர்கள் சந்தேகப்படுவது உண்டு.
கும்பம்:
ஒருவர் தவறு செய்தால் இவர்கள் எல்லோரும் அந்த தவறை தான் செய்வார்கள் என்று நினைப்பதுண்டு.
மீனம்:
இவர்களுக்கு யாரேனும் உதவி செய்தால் நன்றி சொல்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |