ஓதிமலையின் ஐந்து தலை முருகன் கோவில்

By பிரபா எஸ். ராஜேஷ் Dec 28, 2024 05:25 AM GMT
Report

ஓதிமலை கோவை மற்றும் திருப்பூரில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் இரும்பறை என்ற பகுதியில் உள்ளது. இரும்பொறை என்பது சேர மன்னர்களின் சிறப்புப் பெயராகும்.

சேர மன்னர்கள் ஆண்ட இப்பகுதியில் அவர்களின் பெயரால் மலை வழங்குவது இயல்பு ஆனால் இந்த மலைக்குப் பெயர் காரணமாக ஒரு புராணக்கதை உள்ளது தான் வியப்பு. ஓதிமலை கோவிலின் தெப்போற்சவமும் தேரோட்டமும் இரும்பொறையில் கைலாசநாதர் கோயிலில் தான் நிகழ்கின்றன.  

ஓதி மலையின் சிறப்பு

ஓதி மலையின் அருகில் வேறு பாறைகளோ குன்றுகளோ கரடுகளோ காணப்படவில்லை. இது தனி ஒரு குன்றாக ஆயிரம் மீட்டர் உயரத்தில் நிமிர்ந்து நிற்கின்றது. செங்குத்தான மலையாக இருப்பதால் இம்மலையில் ஏறி முருகனைக் காணச் செல்வது மிகவும் கடினமாக உள்ளது.

படிக்கட்டுகளும் செங்குத்தாகவே உள்ளன. மலைப்பாதையின் தொடக்கத்தில் பாத விநாயகர் சன்னதி உள்ளது. போகும் வழியில் விக்கினங்கள் ஏதும் வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டு மலையேற வேண்டும். 1870 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும்.

850 படிகள் ஏறியதும் அங்கே உள்ள வெள்ளை விநாயகர் சன்னதி வரும். அதுவரை இடையில் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கென்று மண்டபங்கள் எதுவும் இல்லை. வெள்ளை விநாயகரை வணங்கி மேற்கு நோக்கி ஏறினால் பரமேஸ்வரி அம்மன் சன்னதி வரும்.

ஓதிமலையின் ஐந்து தலை முருகன் கோவில் | Othimalai Murugan Temple

அதனை அடுத்து இன்னும் உயரமான பகுதியில் ஏறினால் இடும்பன் சந்நிதியைக் காணலாம். முருகனின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அண்மையில் 75 ஆண்டுகளுக்கு முன்பு தான் செங்கற்களால் கோவில் மண்டபங்கள் கட்டப்பட்டன.

1932 ல் கற்கோவிலும் விமானமும் எழுப்பப்பட்டது. இக்கோவில் மலை உச்சியில் ஒரு சிறிய சமதளப் பரப்பில் அமைந்துள்ளது. ஓதி மலை முருகன் கோயிலில் மயில் மண்டபமும் மகா மண்டபமும் அர்த்த மந்தமும் உண்டு. மகா மண்டபத்தின் விதானத்தில் 12 ராசிகளும் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. அதனை அடுத்த அர்த்தமண்டபம் விசாலமான இடப்பரப்பை கொண்டது.

ஞானம் ஓதிய ஞான மலை

ஓதி மலையை ஞானமலை என்றும் அழைக்கின்றனர். இங்கும் திரிசத அர்ச்சனை சிறப்புடையது. இறைவனை 300 துதிகள் சொல்லி அர்ச்சனை செய்வது திரி (3) சத (100) முறை ஆகும். கோவை பகுதியில் திரிசத அர்ச்சனை நடைபெறுவதை பவள மலையிலும் காணலாம்.

இந்திரன் தேவர்களோடு செய்வது திரிசத பூஜை ஆகும். பூ வரம் கேட்டல் என்பது இவ்வூரில் வேறு விதமாக காணப்படுகின்றது. முருகனின் உச்சியில் செவ்வரளி பூக்களை வைத்து பூ கீழே விழுந்தால் முருகன் அனுமதி கொடுத்து விட்டதாக மக்கள் நம்புகின்றனர்.

பூதம் கட்டிய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

பூதம் கட்டிய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

மற்ற ஊர்களில் இரண்டு தாள்களில் வெள்ளை மற்றும் சிவப்பு பூக்களைப் பொட்டலமாகக் கட்டிப் போட்டு சிறு குழந்தையை விட்டு ஒரு பொட்டலத்தை எடுத்துத் தரச் சொல்வார்கள். அவர்கள் மனதில் நினைத்திருந்த பூ வந்தால் இறைவனின் அனுமதி கிடைத்து விட்டதாக பொருள். ஆனால் இங்கு பூ கேட்டல் அல்லது பூ வரம் தருதல் என்பது முருகனின் உச்சியில் இருந்து கீழே அரளிப் பூ விழுவதாக நம்பப்படுகிறது.  

ஓதிமலையின் ஐந்து தலை முருகன் கோவில் | Othimalai Murugan Temple

வெள்ளைப் பாறையும் மணலும்

போகர் யாகம் நடத்தி முருகனை வழிபட்ட இடம் என்று இம்மலையின் வட கிழக்கு பகுதியைச் சுட்டுகின்றனர். அங்கு காணப்படும் மண் வெண்மை நிற மண் ஆகும். அது யாகத்தின் சாம்பலை ஒத்து காணப்படுகின்றது. அருகில் உள்ள வெள்ளியங்கிரி மலையிலும்ம் இத்தகைய வெண் மணலைக் காணலாம்.

அதனால்தான் அந்த மலைக்குப் பெயர் வெள்ளை மலை (வெள்ளயங்கிரி) என்று பெயர். வெள்ளை நிறப் பாறைகள் இருக்கும் இடத்தில் அந்த மண்ணைத் தொட்டு விபூதியாக பூசி கொள்கின்றனர்.

கோயில் வரலாறு

குன்று தோறாடிவரும் குமரன் கோவில்கள் கொங்கு மண்டலத்தில் அதிகம். இங்கு பச்சமலை, பவளமலை, திண்டல் மலை, சிவன் மலை, ஓதி மலை, மருதமலை என்று பல மலைகளில் முருகன் தனிப்பெரும் கடவுளாக எழுந்தருளியுள்ளார்.

இக்கோவில்கள் சங்க இலக்கிய காலத்திற்கு முன்பிருந்தே குறிஞ்சி நிலக் கடவுளான முருகனின் கோவில்கள் ஆகும். கிமு மூன்றாம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து தெற்கே பரவி வந்த பௌத்த சமயத் துறவியர் மலை மீது மடங்கள் அமைத்த போது இங்கிருந்த கோவில்களை தேவேந்திரன் மற்றும் பிரம தேவன் கோவில்களாக மாற்றினர்.

அவ்வாறே ஓதி மலையில் 5 முகம் கொண்ட பிரம்மன் கோவில் தோன்றியது. படடமங்கலம் குருபகவான் கோயிலில் ஐந்து முகம் கொண்ட முருகன் உள்ளார். இதுவும் பிரமதேவன் கோயில் ஆகும். பௌத்தம் அழிந்து சைவம் தலை எடுத்ததும் இக்கோவில் மீண்டும் முருகன் கோவிலாக மாறியது. ஆனால் பிரமதேவனின் ஐந்து முகம் கொண்ட சிலை மாற்றப்படவில்லை. அதற்கு பல கதைகள் உருவாகின.  

ஓதிமலையின் ஐந்து தலை முருகன் கோவில் | Othimalai Murugan Temple

முருகனின் ஐந்து முகம்

ஓதி மலைக் கோவிலில் ஐந்து முகங்களும் எட்டுக் கரங்களும் கொண்ட குமார சுப்பிரமணியரை தரிசிக்கலாம். இக்கோவிலில் முருகன் ருத்ராட்ச பந்தலின் கீழ் சிவ சொரூபமாக எழுந்தருளியுள்ளார். இந்த குடவரை கருவறைக்குப் பெயர் திருக பீடம்.

முருகனுக்கு ஆறுமுகம் என்பது கந்தபுராணக் கதை. கந்தபுராணம் 14 ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்டது அதுவரை முருகனுக்கு ஒருமுகம் அல்லது ஐந்து முகம் கொண்ட திருவருவங்கள் இருந்து வந்தன. அத்தகைய மிகப் பழமையான கோவில்களில் ஒன்று ஓதிமலை முருகன் கோவிலாகும்.

கதை 1

ஐந்து நான்கானது

பெரும்பான்மையான முருகன் கோவில்களில் பிரம்ம தேவனின் கர்வத்தை அடக்கிய கதை தான் ஸ்தல புராணக் கதையாக வழங்கி வருகிறது. ஐந்து முகம் கொண்ட பிரம்மனின் ஒரு தலையை வெட்டிய சிவபுராணக் கதை வருவதற்கு முன்பு பிரம்மதேவன் ஐந்து முகத்துடன் சகல சக்தி படைத்த கடவுளாக பௌத்த சமயத்தனரால் வணங்கப்பட்டான்.

முன் ஜென்ம பாவங்களை போக்கி சனி தோஷத்திலிருந்து நிவாரணம் பெற வேண்டுமா?

முன் ஜென்ம பாவங்களை போக்கி சனி தோஷத்திலிருந்து நிவாரணம் பெற வேண்டுமா?

 

சிவபெருமானுக்கு என்று எழுதப்பட்ட கதையில் பிரம்ம தேவனின் ஒரு தலையை கொய்ததற்கான காரணம் விசித்திரமானது. அக்காலகட்டத்தில் சிவனுக்கும் ஐந்து தலை இருந்தது. சிவன் என்று நினைத்த பிரம்ம தேவனை பார்வதி தேவி அணைத்துத் தழுவினாள்.

இதனால் பிரம்மன் மீது கோபம் கொண்ட சிவபெருமான் அவனது ஒரு தலையைக் கொய்தார். பிரம்மஹத்தி தோஷம் சிவபெருமானை பிடித்துக் கொண்டது. அதன் பிறகு பிரம்மன் நான்கு தலையோடு இருந்தார்.

மலை உச்சியில் பௌத்த துறவியர்களின் மடங்களும் மலை அடிவாரத்தில் அவர்களின் ஆலயங்களும் தோட்டங்களும் மருத்துவ சேவை மையங்களும் மக்களின் வழிபாட்டுக் கூடங்களும் தற்காப்பு கலைக்கூடங்களும் இருந்தன.

ஓதிமலையின் ஐந்து தலை முருகன் கோவில் | Othimalai Murugan Temple

கதை 2

கை மாறிய படைப்புத் தொழில்

பிரம்மதேவன் ஓம் என்னும் பிரணவத்திற்கு பொருள் தெரியாது என்று முருகனிடம் திணறியபோது முருகன் பிரம்ம தேவனை சிறையில் அடைத்தார். படைப்புத்தொழிலை முருகனே மேற்கொண்டார். முருகன் படைத்த உயிர்கள் அனைத்தும் புண்ணியாத்க்களாக இருந்த காரணத்தினால் அவை எதுவும் சாகவில்லை.

இதனால் பூமியின் பாரம் பெருகியது. பூமாதேவி திணறினாள். பூமாதேவி திருக்கயிலாயத்திற்குச் சென்று சிவபெருமானிடம் தன் துன்பத்தைத் தீர்க்கும்படி முறையிட்டாள். சிவபெருமான் முருகனிடம் சொல்லி பிரம்மதேவனை விடுவித்தார்.

விடுதலை பெற்ற பிரம்மதேவனிடம் படைப்புத் தொழில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. அவர் மீண்டும் வழக்கம் போல தன் படைப்புத் தொழிலைத் தொடங்கி புண்ணியாத்மாக்களையும் துர் பாவாத்மாக்களையும் படைத்தார். பூமியின் பாரம் குறைந்தது.

பிள்ளைப் பேறு வழங்கும் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில்

பிள்ளைப் பேறு வழங்கும் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில்

கதை 3

ஓதிமலை பெயர்க் காரணம்

பிரம்ம தேவனுக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத குற்றத்தினால் முருகன் அவரைச் சிறையில் அடைத்தார். இதனை அறிந்து சிவபெருமான் விரைந்து வந்து முருகனிடம் 'ஏன் ,இப்படிச் செய்தாய் அவர் வயதிலும் அனுபவத்திலும் பெரியவர் அல்லவா!' என்று கேட்டதும் 'வயதும் அனுபவமும் ஒருவரைப் பெரியவர் ஆக்கி விடுவதில்லை தந்தையே.

ஒருவருடைய அறிவும் அனுபவமும் தான் அவரை பெரியவர் ஆக்குகின்றது ' என்று முருகன் உறுதியாகப் பதிலளித்தார். முருகன் தன் தந்தையிடம் 'நீங்கள் சொல்லுங்கள். உங்களுக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா' என்று கேட்டான்.

ஓதிமலையின் ஐந்து தலை முருகன் கோவில் | Othimalai Murugan Temple

சிவபெருமான் திணறினார். அவருக்கும் சட் என்று பதில் சொல்ல வரவில்லை. ஏனென்றால் அவருக்கு பிரணவ மந்திரத்தின் மூலப்பொருளும் தெரிந்திருக்கவில்லை. உடனே முருகன் 'தந்தையே உங்களுக்குத் தெரியாவிட்டால் நான் சொல்கிறேன் கேளுங்கள்' என்றான்.

'சரி சொல்' என்றார். 'நான் குரு ஸ்தானத்திலிருந்து சொல்கிறேன். நீங்கள் சிஷ்யன் ஸ்தானத்திலிருந்து கேட்கிறீர்கள். குருவுக்குரிய மரியாதையை நீங்கள் கொடுங்கள்' அப்போது தான் நான் குருவாக இருந்து உங்களுக்கு பிரணவத்தின் பொருளை ஓதித் தர முடியும்' என்றான்.

அவர் கூறியதன் பொருளை புரிந்து கொண்ட சிவபெருமான் மண்டியிட்டு தலைவணங்கி குருவாக விளங்கும் முருகன் முன்பு பணிந்து நின்று ஓமென்னும் பிரணவத்தின் பொருளை ஓதும்படி வேண்டினார். முருகன் பிரணவத்தின் பொருளை ஓதிய மலை என்பதால் இம்மலை ஓதிமலை என்று பெயர் பெற்றது. 

விஷம் இறங்கவும் சந்திரனைத் தியானிக்கவும் திங்களூர் கோயில்

விஷம் இறங்கவும் சந்திரனைத் தியானிக்கவும் திங்களூர் கோயில்

கதை 3

இரும்பறை

பிரம்ம தேவனை சிறையில் அடைத்த இடம் அருகில் உள்ளது. அதன் பெயர் இரும்பறை (இரும்பு + அறை). என்று என்று இரும்பறைக்கு பெயர் காரணம் சொல்லப்படுகிறது ஆனால் இரும்பறை மலை என்பது இப்பகுதியை ஆட்சி செய்த இரும்பொறை என்ற சேர மன்னன் பெயரால் அழைக்கப்படுகிறது என்பது வரலாற்றாய்வாளர்களின் கருத்து.

இரும்பறை என்று மாற்றி பிரம்மதேவனின் கதையை அதில் கொண்டு போய் சேர்ப்பது சைவ பிரச்சார மார்க்கமாகும். சேர மன்னர்கள் இரும்பறை என்ற பட்டத்தை கொண்டு பல நூற்றாண்டுகளாக தமிழகத்தின் மேற்கு பகுதியை ஆட்சி செய்து வந்தார்கள். இன்றைய கேரளாவும் கொங்கு நாட்டின் சில பகுதிகளும் சேர மன்னர்களின் ஆட்சியின் கீழ இருந்தன.

எனவே இந்த மலையை இரும்பொறை என்று ஆதி காலத்தில் சேரர் காலத்தில் அழைத்தனர் என்பதே பொருத்தமானது. ஓதி மலையில் அடிவாரத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அம்பாளுக்கு என்று சந்நிதி எதுவும் காணப்படவில்லை ஆனால் மலைக்கு மேலே காசி விஸ்வநாதர் காசி விசாலாட்சி என்ற பெயரில் சாமியும் அம்மனும் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். 

ஓதிமலையின் ஐந்து தலை முருகன் கோவில் | Othimalai Murugan Temple

பூ வரம் கேட்டல்

இப்பகுதி வாழ் மக்கள் தங்கள் வீட்டில் நல்லது கெட்டது நடக்க தீர்மானிக்கும் போது முருகனிடம் வந்து பூ போட்டு பார்த்து முடிவு செய்கின்றனர். கல்வி தொழில் திருமணம் போன்ற நல்ல காரியங்களுக்கு இங்கு வந்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.  

பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும்

மற்ற முருகன் கோவில்களில் இருப்பது போலவே ஓதிமலை முருகன் கோயிலிலும் முருகன் பிறந்த கார்த்திகை நட்சத்திரம் அன்றும் சஷ்டி திதி என்றும் மற்றும் செவ்வாய் வெள்ளி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சிவலிங்கம் இருப்பதால் அமாவாசைக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு.

கல்யாண சுப்ரமணியர்

ஓதி மலை முருகன் கோயிலில் தைப்பூசத்தன்று விசேஷமான பூஜைகள் கோவிலில் நடக்கின்றன. முதல் நாள் கொடியேற்றம் பின்பு சாமி, வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் அடிவாரம் வரை சென்று வருகின்றது. ஐந்தாம் நாள் அன்று காலையில் முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது.

அன்று யானை வாகனத்தில் ரதத்தில் ஏறி திருவீதி உலா வருகின்றார். அடுத்த நாள் பரி வேட்டை, தெப்பத் திருவிழா பின்பு மஞ்சள் நீர் உற்சவத்துடன் 10 நாள் திருவிழா இனிதே நிறைவு பெறுகின்றது.

தேரோட்டம் பரிவேட்டை தெப்பத் திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் அருகில் இரும்பறையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நடைபெறுகின்றன. திருக்கல்யாண நிகழ்ச்சி மட்டும் இங்கு நடைபெறுகின்றது. இதனால் முருகன் கல்யாண சுப்ரமனியர் என்று அழைக்கப்படுகிறார். 

சென்னையில் நாம் கட்டாயம் தரிசிக்க வேண்டிய நரசிம்மர் கோயிகள்

சென்னையில் நாம் கட்டாயம் தரிசிக்க வேண்டிய நரசிம்மர் கோயிகள்

கதை 4

வழியில் தங்கிய ஒரு முகம்

முருகன் எழுந்தருளியிருக்கும் மலைகளில் சித்தர்களோடு தொடர்பு கொண்ட கதைகளும் இப்பகுதியில் வழங்கி வருகின்றன. பழனிக்குப் போக விரும்பிய போகருக்கு வழி தெரியாத காரணத்தினால் அவர் முதலில் ஓதி மலையில் வந்து தங்கி இருந்தார்.

இங்கு இருக்கும் முருகப்பெருமானை வணங்கி தனக்குப் பழனி மலைக்குச் செல்ல வழி காட்டும்படி வேண்டினார். அவர் வேண்டுதலுக்குச் செவி சாய்த்த முருகன் மனிதரைப் போல ஒரே முகத்துடன் போகருக்கு வழிகாட்ட வந்தார்.

சிறிது தூரம் வந்து குமாரபாளையம் நாகநாத ஈஸ்வரர் கோவில் இருக்கும் இடத்தில் நின்று அங்கிருந்து போகரை போகச் சொல்லி விட்டு முருகன் அங்கு தங்கி கோவில் கொண்டு அருளினார். அவருடைய ஒருமுகம் இங்கே இருக்கின்றது. மீதி 5 முகங்கள் ஓதி மலையில் இருப்பதாக ஒரு கதை உதவுகிறது. 

நேர்த்திக்கடன்கள்

மற்ற முருகன் கோவில்களில் உள்ள நேர்த்திக்கடன்களைப் போலவே ஓதி மலை முருகன் கோவிலிலும் மக்கள் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றுகின்றனர். முருகனுக்கு செவ்வரளி மாலை கிருத்திகை நாளில் சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை குழந்தை பேறின்மை நீங்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US