தொடங்கும் பங்குனி உத்தரம் - இதை மறக்காம பண்ணுங்க! திருமண தடை நீங்கும்
பங்குனி மாதம் பௌர்ணமியுடன் உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். கல்யாண வரமளிக்கும் இந்த நாளில் தான் திருமகள் விரதமிருந்து திருமாலின் திருமார்பில் இடம்பிடித்தாள்.

அதைப் போலவே கலைமகளும் பிரம்மாவின் நாவில் இந்த நாளில்தான் அமர்ந்தாள். பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில்தான்.
எனவே, இந்த நாள் லட்சுமி கடாட்சமாக விளங்குகிறது. இதை ‘கல்யாண விரத நாள்’ என்றும் போற்றுவர். தெய்வத் திருமணங்கள் பல, புனிதமான இந்த பங்குனி உத்திர திருநாளில் தான் நிகழ்ந்தன என புராணங்கள் கூறுகின்றது.

ராம சகோதரர்களின் திருமணம் நடந்தேறிய நாள் பங்குனி உத்திரத் திருநாள். அதேபோல், ஆண்டாள், ஶ்ரீரங்கநாதர்; தேவேந்திரன்- இந்திராணி பிரம்மன் - கலைவாணி ஆகியோரது திருக்கல்யாணம் நிகழ்ந்ததும் இந்தப் புனித நாளில்தான்.
மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஶ்ரீமீனாட்சி தேவியை மணந்து ஶ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரராக தரிசனம் தந்ததும் பங்குனி உத்திர திருநாளில்தான். இப்படி இந்த நாளுக்கென்று பல சிறப்புக்கள் உள்ளன. இந்த நாளில் சில வழிபாடுகளை மறக்காமல் செய்ய வேண்டும்.

பங்குனி உத்திர வழிபாடுகள்
திருக்கல்யாண தரிசனம்
- திருமணத் தடை உள்ளவர்கள், பங்குனி உத்திரத்தன்று முறைப்படி விரதம் கடைப்பிடித்து, தம்பதி சமேதராகத் திகழும் தெய்வங்களைப் பூஜித்து வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும்.
- அன்று ஆலயங்களில் நிகழும் திருக்கல்யாணங்கள், சேர்த்தித் திருவிழா வைபவங்களைத் தரிசிப்பது விசேஷம்.
கல்யாண சுந்தர விரதம்
- சிவபெருமான் அம்பாளைக் கரம் பிடித்த நன்னாளில், பசுவாகிய தங்கள் ஆன்மா, பதியாகிய சிவனை அடைய வேண்டும் என்பதற்காக சிவனடியார்கள் ‘கல்யாணசுந்தர விரதம்’ அனுஷ்டிப்பார்கள்.
- குறிப்பாக, பங்குனி உத்திரத்தன்று திருவிளக்கு தீபத்தில், சிவபெருமானும் பார்வதி தேவியும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருள் வதாக ஐதீகம். ஆகவே அன்று அதிகாலை எழுந்து நீராடி, வீட்டில் விளக்கேற்றிவைத்து சிவ பெருமானை கல்யாண சுந்தரராக பாவித்து வணங்கவேண்டும்.
இது தொடர்பில் இன்னும் விரிவாக காணொளி பார்த்து தெரிந்துகொள்ளலாம்.