குடும்ப கஷ்டம் விலக செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த பங்குனி உத்திர வழிபாடு
தமிழ் மாதம் 12 மாதங்களில் கடைசி மாதமான பங்குனி மாதம் மிகவும் விஷேசம் வாய்ந்தது. பங்குனி மாதம் பல்வேறு ஆன்மீக சிறப்புகளும் வழிபாடும் நிறைந்த மாதம் ஆகும். அன்றைய தினம் பலரும் விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வார்கள்.
அப்படியாக இந்த வருடம் பங்குனி மாதம் நாளை (11.04.2025) அன்று வருகிறது. இந்த தினத்தில் நம்முடைய குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் விலகவும், வாங்கிய கடன்கள் வெகு விரைவில் திருப்பி செலுத்தவும் நாம் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
ஒரு மனிதனுக்கு இருக்க கூடாத சுமைகளில் கடன் சுமை ஒன்று. கடன் வாங்கினால் அது நம்முடைய நிம்மதியை அழித்து விடும். அப்படியாக ஏதோ ஒரு சூழ்நிலையால் கடன் வாங்கி அவதி படுபவர்கள் உஙகள் கடன் சீக்கிரம் அடைந்து போக பங்குனி உத்திரம் அன்று முருகப்பெருமானை பற்றி கொள்ளுங்கள்.
அப்படியாக, நாளைய தினம் செவ்வாய் ஹோரையில் முருகனுக்கு 6 நெய் விளக்கு ஏற்றி வைத்து முருகன் முன்பாக ஒரு சின்ன கிண்ணத்தில் துவரம் பருப்பை போட்டு வைத்து, மனம் உருகி நீங்கள் வாங்கிய கடன் வெகு விரைவில் அடையவும், மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகாமல் இருக்கவும் முருகனை நன்றாக வழிபாடு செய்யவேண்டும்.
நாளைய தினம் செவ்வாய் ஹோரை மதியம் 11 மணியிலிருந்து 12 மணி வரை வருகிறது. இந்த நேரத்தை பயன் படுத்தி கொண்டு வழிபாடு செய்தால் முருகன் அருளால் விரைவில் கடன் தீர்ந்து நிம்மதி உண்டாகும்.
அதோடு குடும்பத்தில் உண்டான சிறு சிறு பிரச்சனைகளும் நல்ல முடிவு பெரும். முருக பெருமான் செவ்வாய் கிரகத்தின் தாக்கம் குறைய நமக்கு அருள் புரிபவர். ஆக அவரை பற்றி கொள்ள குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம், மனநிலை எல்லாம் சீராகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |