நாம் செய்யும் பாவம் எத்தனை தலைமுறைகளை பாதிக்கும்?
நாம் செய்யும் செயலுக்கு பலன் நிச்சயம் உண்டு.அப்படியாக ஒருவர் செய்யும் புண்ணியமும் பாவமும் அதே கணக்கில் தான் சேரும் . நாம் சொல்லும் செயலும் அன்றோடு முடிந்து போவது இல்லை.பல தல முறைகளை பாதிக்கும்.
அதாவது நாம் இல்லாமல் போனாலும் நாம் செய்த வினைப்பயன் அல்லது புண்ணிய பலன்களை நம் தலைமுறைகள் அனுபவித்து தீரவேண்டும். அப்படியாக ஒருவர் பாவம் செய்திருந்தாலும் அதற்கான பரிகாரங்கள் செய்து அந்த பாவ பாதிப்புகளில் இருந்து நம்மை காப்பாற்றலாம்.
அப்படியாக ஒருவர் புண்ணியம் செய்ய அது எத்தனை தலைமுறைக்கு சென்றடையும் . என்ன புண்ணியம் செய்தால் எத்தனை தலைமுறைக்கு அந்த புண்ணியம் சென்று சேரும் என்பதை பார்ப்போம்.
பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் 5 தலைமுறைக்கு அந்த புண்ணியம் சென்றடையும்.
நாம் புனிதநதிகளில் நீராடுதல் அந்த புண்ணியம் 3 தலைமுறைக்கு சேரும்.
திருக்கோயிலில் தீபம் ஏற்றினால் 5 தலைமுறைக்கு அந்த புண்ணியம் சேர்கிறது.
ஒருவர் அன்னதானம் செய்வதால் 3 தலைமுறைக்கு அந்த பலன் சென்றடையும்.
ஒரு ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதால் 5 தலைமுறைக்கு அந்த பலன் கிடைக்கும்.
பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது 6 தலைமுறைக்கு பலன் உண்டாகும்.
திருக்கோயில் புனர்நிர்மாணம் 7 தலைமுறைக்கு அந்த புண்ணியம் சேரும்.
ஆதரவற்று இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தால் 9 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைக்கு நன்மை தரும்.
முன்னோர்களுக்கு கயா ஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்வதால் 21 தலைமுறைக்கு பலன் உண்டாகும்.
நாமும் முடிந்தவரை நல்ல காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம்.நாம் எப்படி நல்ல காரியம் செய்ய அதற்கான புண்ணியம் நமது தலை முறையினருக்கு சென்று சேருகிறதோ.
அதேபோல் நாம்செய்யும் தீய செயல்களுக்கான பாவங்களும் நமது தலைமுறையினருக்கு சென்று சேரும் என்பதை மறவாமல் வாழ்தல் வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |