இந்த 3 தேதியில் பிறந்த பெண்கள் அதிகம் யோசித்துக் கொண்டே இருப்பார்களாம்
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் சிந்திக்கும் திறன் இயல்பாகவே இருக்க கூடியது. ஆனால் ஒரு சிலர் எதற்காக சிந்திக்கிறோம் என்பதை மறந்து தேவையில்லாத விஷயத்திற்கு எல்லாம் அவர்கள் மனதை போட்டு குழப்பிக் கொண்டிருப்பார்கள்.
ஒரு விஷயம் நடப்பதற்கு முன்பாக அது எவ்வாறு நடக்கும் நடக்காமல் போய்விடுமா என்றெல்லாம் அதிகம் யோசித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் எண் கணிதப்படி இந்த குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் அதிக அளவில் யோசித்துக் கொண்டே இருப்பார்களாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
எண் 3:
எந்த மாதத்திலும் 3, 12, 21 அல்லது 30 ஆம் தேதிகளில் பிறந்த பெண்களின் எண் 3 ஆகும். இவர்கள் எப்பொழுதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பார்கள். உதாரணமாக இவர்கள் நமக்கு அலைபேசியில் அழைக்கும் பொழுது ஒருமுறை அவர்களுடைய அழைப்பை நாம் வேலை பளு காரணமாக எடுக்க தவறிவிட்டால் கூட இவர்கள் அதை பெரும் அளவில் யோசித்து மனதை குழப்பிக் கொண்டிருப்பவர்கள். அதனால் இவர்களை சிறிது நேரம் தனியாக விட்டுவிட்டோம் என்றால் பல கோணல்களில் இவர்கள் யோசித்து பிரச்சனையை அவர்களை உருவாக்கிக் கொள்வார்கள்.
எண் 5:
எந்த மாதத்திலும் 5, 14 அல்லது 23 ஆம் தேதிகளில் இந்த பிறந்த பெண்களின் எண் 5 ஆகும். இவர்கள் எப்பொழுதுமே ஒருவரிடம் பழகும் பொழுது ஆழம் பார்த்து பழகக் கூடிய நபராக இருப்பார்கள். அதாவது நல்ல மனிதர்களை கூட இவர்கள் நம்புவதற்கு பல காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த அளவிற்கு இவர்கள் பல வகையில் யோசனை செய்து தன்னுடைய மனதை குழப்பிக் கொள்பவர்கள்.
எண் 7:
எந்த மாதத்திலும் 7, 16 அல்லது 25 ஆம் தேதிகளில் பிறந்த பெண்களின் எண் 7 ஆகும். இந்த தேதியில் பிறந்த பெண்கள் மிகவும் ஆழ்ந்து சிந்திக்க கூடிய திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் சிந்திக்கும் திறனை எப்பொழுதும் தேவையில்லாத விஷயங்களுக்கு பயன்படுத்தி அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிக் கொள்கிறார்கள். மேலும் இவர்கள் ஒரு விஷயத்தை நோக்கி செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள் என்றால் அதைப் பற்றி இடைவிடாமல் யோசித்து செய்பவராக இருக்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







