இந்த 5 ராசியினர் உலக அளவில் மிகவும் பிரபலமானவர்கள்.. யார் தெரியுமா?

By Sakthi Raj Apr 29, 2026 10:16 AM GMT
Report

ஜோதிடம் என்பது அற்புதமான கலையாக இருக்கிறது. அப்படியாக குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் உலக அளவில் பிரபலமாக இருக்கிறார்கள். அதாவது அந்த ராசி அதிபதியின் காரகத்துவத்தை அந்த நபர் பெறுவதால் அந்த நபர் எல்லோரையும் விட தனித்து செயல்படக் கூடியவர்களாகவும் , மிகப்பெரிய அளவில் பெயர் புகழைப் பெறக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படியாக எந்த ஐந்து ராசியில் பிறந்தவர்கள் உலக அளவில் மிகவும் பிரபலமானவர்கள்? அவர்கள் யார் என்று பார்ப்போம்

இந்த 5 ராசியினர் உலக அளவில் மிகவும் பிரபலமானவர்கள்.. யார் தெரியுமா? | People Born This 5 Zodiac Are World Famous

இந்த 7 விஷயம் தெரியாமல் தவறியும் வைர நகை அணிந்து விடாதீர்கள்

இந்த 7 விஷயம் தெரியாமல் தவறியும் வைர நகை அணிந்து விடாதீர்கள்

சிம்மம்:

சிம்ம ராசியை ஆட்சி செய்யக்கூடிய கிரகமாக சூரிய பகவான் இருக்கிறார். சூரிய பகவான் தான் தலைமை பண்புக்கு காரணியாக இருப்பதால் இவர்களுடைய தன்னம்பிக்கை மற்றும் ஒருவரை வழிநடத்தக்கூடிய அந்தப் பண்பு எல்லோரையும் கவர்ந்து விடுகிறது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் எப்பொழுதும் தனித்துவமாக செயல்படக்கூடியவர்கள். இவர்களிடம் நிறைய மர்மமும் ரகசியமும் ஒளிந்திருக்கும். அதுமட்டுமல்லாமல் இவர்கள் அதிக அளவில் ஒருவருக்கு விசுவாசமாக இருப்பார்கள். இவர்களை நம்பி எந்த ஒரு ரகசியத்தை சொன்னாலும் அது இறுதி நொடி வரை காக்கப்படுகிறது.

இந்த உலகத்தில் மரண தண்டனை விடவும் மோசமான தண்டனை எது தெரியுமா?

இந்த உலகத்தில் மரண தண்டனை விடவும் மோசமான தண்டனை எது தெரியுமா?

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரப் பறவையாகவே இருக்கிறார்கள். இவர்கள் எதையும் நேரடியாக மனதிற்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். எல்லாவற்றையும் எளிதாக கடந்து செல்லக்கூடிய ஒரு பக்குவத்தை வைத்திருப்பார்கள். சுதந்திரமாக செயல்பட்டு எல்லா விஷயங்களையும் காதலிக்க கூடிய குணம் கொண்டவர்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் பொறுத்தவரை இவர்கள் பேச்சுத் திறனுக்கு அதிக பெயர் வாய்ந்தவர்கள். இவர்களுடைய அந்த வசீகரமான பேச்சும் தோற்றமும் ஒருவரை உடனடியாக அவர்கள் பக்கம் சாய்க்கக்கூடிய பண்பு இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் பேச்சு திறமையால் எல்லாவற்றையும் சாதித்து விடுவார்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் லட்சியவாதிகளாக இருப்பார்கள். இவர்கள் எதையும் தீர ஆராய்ந்து செயல்படக்கூடியவர்கள். அது மட்டுமல்லாமல் இவர்களுடைய சிந்தனையும் பிறரை விட தனித்து இருக்கிறது. எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்து ஒருவரை ஊக்குவிப்பதில் இவர்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US