இந்த ராசிக்காரர்கள் பொய் பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்களாம்
ஜோதிடத்தை பொருத்தவரை ஒருவர் பிறந்த ராசி நட்சத்திரத்தின் அடிப்படையில் அவர்களுடைய குணாதிசயங்கள் அமைகிறது அந்த வகையில் ஒரு சில ராசியினர் எப்பொழுதும் குழப்பமாகவே இருப்பார்கள். ஒரு சிலர் ராசியினர் எப்பொழுதும் தெளிவான மனப்பான்மையில் இருப்பார்கள்.
இதற்கு எல்லாம் அவர்களுடைய ராசி அமைப்பு காரணமாக இருக்கிறது. அப்படியாக குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் பொய் பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்களாம். அதாவது உண்மை பேசக்கூடிய வாய்ப்புகள் இருப்பினும் அவர்கள் பொய் பேசுவதை தான் விரும்புவார்களாம். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியை பொறுத்தவரை இவர்கள் எப்பொழுதும் குழப்பமான மனநிலையை கொண்டு இருப்பார்கள். மேலும் இவர்கள் அவர்களுடைய வசதிக்காக பல நேரங்களில் பலரிடம் சின்ன சின்ன பொய்களை சொல்வதுண்டு. இவர்கள் சொல்லக்கூடிய பொய்யானது உண்மை போல் இருப்பதால் சமயங்களில் இவர்கள் பேசக்கூடிய உண்மையை பலரும் நம்ப முடியாத நிலையை இவர்கள் கொடுத்துவிடுகிறார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் எப்பொழுதும் தங்களை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்காக பல பொய்களை இவர்கள் சொல்லி விடுகிறார்கள். இவர்கள் சொல்ல கூடிய சின்ன சின்ன பொய்யானது பலருக்கும் இவர்கள் மேல் ஒரு நம்பகத்தன்மையை குறைத்தாலும் இவர்களால் பொய் பேசுவதை பல நேரங்களில் விட முடிவதில்லை.
தனுசு:
தனுசு ராசிக்கு வாழ்க்கை ரசித்து வாழக்கூடியவர்கள். இருந்தாலும் இவர்கள் மிகவும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக சமயங்களில் காணப்படுகிறார்கள். ஆதலால் அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையை அவர்கள் போக்கிக் கொள்வதற்கு இவர்களுடன் இருப்பவர்களிடம் அவ்வப்போது பொய் பேசுவதை நாம் பார்க்கலாம். சில நேரங்களில் தெரியாமல் செய்த தவறை மறைப்பதற்காக இவர்கள் பொய் பேசுவது உண்டு.
மீனம்:
மீன ராசியை பொறுத்தவரை இவர்கள் ஒரு விஷயத்தை ஒருவரிடம் பகிர்ந்து கொள்ள கூடாது என்று முடிவெடுத்து விட்டால் இவர்கள் அதை சொல்ல மாட்டார்கள். மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். அப்படியாக இவர்கள் பொய் சொல்ல வேண்டும் என்று பொய் பேச மாட்டார்கள் இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலை இவர்களை பொய் பேச சமயங்களில் தூண்டி விடுவதால் ஒரு பொய்யை சொல்வதால் இவர்கள் சில நேரங்களில் பல பொய் பேசுவதற்கு ஆளாகி விடுகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |