மறந்தும் இந்த திசையில் உறங்காதீர்கள்-சித்தர் சொல்லும் ரகசியம்
மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியம்.தூக்கம் என்பது ஒரு வரம் என்றே சொல்லலாம்.ஒரு மனிதனுக்கு சரியான தூக்கம் இல்லை என்றால் அவர்கள் பல துன்பத்திற்கு ஆளாகக்கூடும்.அதாவது சரியான தூக்கம் மேற்கொள்ளவில்லை என்றால் அந்த மனிதனுக்கு புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் வரக்கூடும்.
இதை சித்தர்கள் பல பாடல்களிலும் தூக்கம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்றும் அவன் எந்த திசையில் உறங்குவதால் அவனுக்கு நன்மை உண்டாகும் என்பதை பாடல் வழியாக சொல்லியிருக்கின்றனர். மேலும் தூங்கும் திசை பொருத்தம் அவர்களுக்கு நல்ல உறக்கம் ஏற்பட உள்ளது.
அந்த வகையில் ஒரு மனிதன் தூங்கும் பொழுது எந்த திசையில் உறங்க வேண்டும்,எந்த திசையில் மறந்தும் உறங்க கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
நாம் கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தால் - உத்தமம்.
நாம் தெற்கு திசையில் தலைவைத்து படுத்தால் - ஓங்குயிர்.
நாம் மேற்கு திசையில் தலைவைத்து படுத்தால் - மத்திமம்.
நாம் வடக்கு திசையில் தலைவைத்து படுத்தால் - மரணம்.
பெரும்பாலாக ஒரு மனிதன் கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பதால் அவர்களுக்கு நன்மை உண்டாகும்.தெற்கு திசையில் படுக்கும் பொழுது ஆயுள் அதிகரிக்கிறது.ஆனால் மேற்கு திசையில் தலை வைத்துப் படுக்கும் பொழுது அவரக்ளுக்கு தேவை இல்லாத கனவு,வீண் அதிர்ச்சி உண்டாகும்.
இருந்தாலும் ஒருவர் மறந்தும் வடக்கு திசையில் தலை வைத்து உறங்கக்கூடாது.இதை விஞ்ஞான ரீதியாகவும் உண்மை என்று நிரூபிக்க பட்டு இருக்கிறது.அதாவது வடக்கு திசையில் படுக்கும் பொழுதுஅந்த திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும்.
இதனால் மூளை பாதிக்கப்படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். ஆக ஓர் இடத்தில் உறங்கும் பொழுது சரியான திசை அறிந்து உறங்குவது நம்முடைய உடலுக்கும் மனதிற்கும் நன்மை சேர்க்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |