ஜாதகத்தில் யாருக்கு மிகப்பெரிய தொழில் அதிபர் ஆகக்கூடிய யோகம் கிடைக்கும்?
இங்கு பெரும்பாலான மனிதர்களுக்கு நாமே முதலாளியாக மாற வேண்டும் என்ற கனவுகள் இருக்கும். வேறு ஒருவருக்காக உழைத்து அவர்கள் கைகளால் வாங்கக்கூடிய சம்பளத்தை பெரும்பாலான நபர்கள் விரும்புவதில்லை.
இருப்பினும் கால சூழ்நிலையால் பொருளாதார காரணத்தினால் அவர்கள் கடைசி வரை உழைப்பாளியாக இருக்க வேண்டிய நிலையை பெறுகிறார்கள். இருப்பினும் ஒரு சிலருக்கு தாங்கள் மற்றொருவருக்கு வேலை ஆட்களாக இருப்பதை கடந்து நாம் ஒரு முதலாளியாக மாற வேண்டும் என்கின்ற லட்சியம் உருவாகிவிடும்.
இவ்வாறு ஒரு எண்ணம் வருகிறது என்றாலே அந்த நபர் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்து விடுவார்கள். அதோடு இவ்வாறான எண்ணம் தோன்றுவதற்கும் முதலில் அவர்களுக்கு ஜாதக ரீதியாக இருக்கக்கூடிய அமைப்புகளை முக்கிய காரணமாக இருக்கிறது.
அப்படியாக, எந்த கிரக அமைப்பு கொண்டவர்கள் கட்டாயமாக வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முதலாளியாக உருவெடுக்கக்கூடிய யோகம் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய், சனி, சுக்கிரன் இவர்கள் மூன்று பேரும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு சனி தான் உழைப்பாளியாக இருக்கக்கூடிய யோகத்தை கொடுக்கிறார்.
செவ்வாய் துணிச்சலாக எதையும் சாதிக்கக்கூடிய யோகத்தை கொடுக்கிறார். சுக்கிர பகவான் வருமானத்தை தடையின்றி வரக்கூடிய பாக்கியத்தை கொடுக்கிறார்.
ஆக இந்த மூன்று கிரகங்களும் ஒருவருக்கு மறையாமல் இருந்தாலும் நல்ல ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் இந்த நபர்கள் எல்லோரும் கட்டாயமாக தொழிலதிபராக மாறி ஒரு மிகப்பெரிய அளவில் கோடீஸ்வர யோகத்தை பெற்று விடுவார்கள்.
மேலும் ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை தூண்டுவதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றியும் பல்வேறு ஜோதிட தகவலை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதைப் பற்றி பார்ப்போம்.