பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்
இந்தியாவில் தமிழர்களின் பெறுமை காக்கும் பல கோயில்கள் உள்ளன.
கற்பக விநாயகர் கோவில்
தமிழ்நாடு- சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் இருக்கும் கோவில் தான் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்.
இந்த கோயிலை பெரும்பாலும் 'பிள்ளையார்பட்டி' என்றே அழைப்பார்கள்.
ஆனால் அதையும் தாண்டி இந்த கோயிலை எருகாட்டூர், மருதங்குடி, திருவீங்கைகுடி, திருவீங்கைச்வரம், இராசநாராயணபுரம் உள்ளிட்ட பெயர்களை கொண்டும் அழைப்பார்கள்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இரண்டு இராஜகோபுரங்கள் இருக்கின்றன. வெளியிலிருந்து பார்ப்பதற்கு சுத்தமாகவும், பொலிவுடனும் இருக்கும்.
திருக்கோயிலின் தெற்கு புறத்தில் இருந்து பார்க்கும் போது குன்றில் வடமுகமாக மலையைக் குடைந்து அமைக்கப் பெற்ற குடைவரை போல் காட்சியளிக்கும்.
இதனை தொடர்ந்து நான்கு தூண்கள் இடைநிற்க தென்வடல் ஓடிய இரட்டைப்பத்தி மண்டபம் காணப்படும். அங்கு தான் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் கற்பக விநாயகர் திருக்கோலம் இருக்கும்.
இப்படி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பற்றி சொல்ல போனால் சொல்லிக் கொண்டே போகலாம். இது போல் வேறு என்னென்ன சிறப்புக்கள் இருக்கின்றது என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பிள்ளையாரின் சிறப்பு
1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் பெருமானின் துதிக்கை வலம் சுழியாக அமைந்திருக்கும்.
2. சாதாரணமாக மற்ற இடங்களில் பிள்ளையாருக்கு நான்கு கைகள் இருக்கும் ஆனால் இந்த கோயிலில் இருக்கும் பிள்ளையாருக்கு இரண்டு கைகள் மாத்திரமே இருக்கும்.
3. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது போல் காட்சி தரும்.
4. கற்பக விநாயகர் கோயிலுள்ள விநாயகருக்கு வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்திருப்பார்.
5. இடதுக் கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றும்.
6. பிள்ளையாரின் வலதுக் கரத்தில் மோதகம் தாங்கி இருப்பது போன்று காட்சிக் கொடுக்கும்.
7. ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் வகையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |