மேஷத்தில் புதன் இருந்தால் தாய் மாமனுக்கு ஆபத்து வருமா?
ஜோதிடத்தில் புதன் பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் தான் ஒருவருக்கு எழுத்து, கணக்கு, தகவல் தொடர்பு, சகோதரி, மகள், தாய்மாமன் ஆகியவற்றை குறிக்கக்கூடிய கிரகமாக இருக்கிறார்.
அப்படியாக, 12 ராசிகளில் புதன் எந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் அதனுடைய தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும். அதை பற்றி பார்ப்போம்.
மேஷம் :
மேஷத்தில் புதன் பகவான் இருக்கின்ற பொழுது இவர்களுக்கு புதுமையான சிந்தனைகள் இருக்கும். ஆனால், சகோதரி, மகளுக்கு உடல் நல குறைவு மற்றும் தாய் மாமாவுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
ரிஷபம்:
பொருளாதார ஈர்ப்பு, வங்கி துறை சார்ந்த ஆர்வம் இருந்தாலும் நரம்பு பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம் :
மிதுனத்தில் புதன் பகவான் ஆட்சி பெறுகிறார். இவர்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் கல்வியில் தடைகள் வரலாம். உறவுகளில் சவால்களை சந்திக்கலாம்.
கடகம்:
கடகத்தில் புதன் இருக்கின்ற பொழுது இவர்களுக்கு பாதுகாக்க கூடிய குணம் இருக்கிறது. ஆனால் முடிவெடுப்பதில் சில குழப்பங்கள் வரலாம்.
சிம்மம்:
சிம்மத்தில் புதன் இருக்கின்ற பொழுது இவர்களுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும். கல்வி தடைகள் யாவும் விலகும்.

கன்னி:
கன்னி ராசியில் புதன் இருக்கின்ற பொழுது அதீத புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். ஆனால், சட்ட சிக்கல்கள் ஆவணப் பிரச்சனைகளை சந்திக்க கூடியவர்கள்.
துலாம் :
துலாம் ராசிக்கு புதன் இருக்க மார்க்கெட்டிங் துறையில் வெற்றி பெறலாம். இருப்பினும் காதலில் அவ்வப்போது சில குழப்பங்களை சந்திக்கிறார்கள்.
மேலும், புதன் மற்ற வீடுகளில் அமர்ந்திருந்தால் என்ன பலன் என்று இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |