போகி பண்டிகை அன்று வழிபட வேண்டிய முக்கியமான இரண்டு கடவுள்கள் யார் தெரியுமா?

By Sakthi Raj Jan 12, 2025 08:45 AM GMT
Report

உலகத்தில் பிறந்த உயிரினங்களில் யாருக்கு தான் கவலை இல்லை,துன்பம் இல்லை.அதில் மனிதன் அவன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறான்.மற்ற உயிரனங்கள் செய்வதறியாது கடந்து செல்கிறது. ஆக ஒரு மனிதனுக்கு மனதில் குழப்பம்,பயம்,மனக்கவலைகள் வந்து விட்டால் அவன் உறக்கம் இழந்து தன்னை மறந்து நடமாடிக்கொண்டு இருப்பான்.

அப்படியாக தை பொங்கல் முதல் நாள் நாம் அனைவரும் போகி பண்டிகை கொண்டாடுவோம்.அன்றைய நாளில் நம்முடைய துன்பம்,மனக்கவலைகள் குழப்பங்கள் முற்றிலுமாக விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வழிபடவேண்டிய முக்கியமான இரண்டு தெய்வங்கள் இருக்கிறார்கள்,அவர்கள் யார்?என்று பார்ப்போம்.

போகி பண்டிகை அன்று வழிபட வேண்டிய முக்கியமான இரண்டு கடவுள்கள் யார் தெரியுமா? | Pogi Festival Celebrationa And Worship 

ராமாயணம் காவியம் பற்றி அறிந்திருப்போம்.அதில் ராமபிரானுக்கு பக்க பலமாக இருந்து ராமன் போரில் வெற்றி அடைய முக்கிய காரணமாக இருந்தவர் அனுமன்.அவ்வாறு அனுமனை நினைத்து வேண்டுதலை வைத்து நாம் எந்த காரியம் தொடங்கினாலும் அதற்கு எதிர்ப்புகள் இன்றி அந்த வேலை வெற்றிகரமாக முடியும்.

2025:பொங்கல் வைக்க நல்ல நேரம் எது?

2025:பொங்கல் வைக்க நல்ல நேரம் எது?

ஆக போகி தினத்தில் அருகில் இருக்கும் அனுமன் ஆலயம் சென்று கட்டாயம் உங்கள் வேண்டுதலை வையுங்கள்.அங்கு சென்று அனுமனுக்கு பிடித்த வெண்ணை சாற்றி வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.

பிறகு,அனுமன் கோயில் என்றாலே செந்தூரம் மிக விஷேசம்.அவ்வாறு செந்தூரம் வாங்கி அனுமன் பாதத்தில் வைத்து பூஜை செய்து பிறகு வீட்டிற்கு எடுத்து வந்து தினமும் அதை நெற்றியில் இட்டு வெளியே செல்ல காரியம் அனைத்தும் வெற்றி அடையும்.

போகி பண்டிகை அன்று வழிபட வேண்டிய முக்கியமான இரண்டு கடவுள்கள் யார் தெரியுமா? | Pogi Festival Celebrationa And Worship 

நாம் இரண்டாவதாக வழிபடவேண்டிய கடவுள் நந்தி தேவர்.நாம் சிவபெருமானிடம் என்ன வேண்டுதல் எல்லாம் வைக்கவேண்டும் என்று எண்ணுகின்றமோ,அதை நந்தி தெய்வரிடம் முறையிட்டு வழிபாடு செய்தால் அதை அவர் சிவபெருமானிடம் காதில் சொல்லிவிடுவார்.

பிறகு நம்முடைய பிராத்தனைக்கு கிடைத்த மிக பெரிய பலனை பார்ப்பீர்கள்.நந்தி தெய்வரை வழிபாடு செய்யும் பொழுது அருகம்புல் வாங்கிக் கொண்டு போய் மாலையாக சாத்துங்கள்.

ஆக மார்கழி மாதம் நிறைவடைய கூடிய நாளிலும் போகிப் பண்டிகை அன்றும் இவ்வாறு வழிபாடு செய்தால் மனதில் கவலைகள் துன்பம் எல்லாம் பறந்து விடும்.மனதில் புத்துணர்ச்சியும் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும் இறை அருளால் கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US