விளக்கு திரியை எத்தனை நாள் ஒரு முறை மாற்ற வேண்டும்?
வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது அவசியமான வழிபாடு ஆகும்.விளக்கு ஏற்றுவதால் வீட்டில் ஒளிந்து இருக்கும் எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகளை விரட்டுகிறது.அப்படியாக தினமும் விளக்கு ஏற்றுவதால் பலர்க்கும் அதில் பலவிதமான சந்தேகம் உண்டாகும்.
அதில் முக்கியமான சந்தேகம் விளக்கு ஏற்றும் திரியை எத்தனை நாள் ஒரு முறை மாற்ற வேண்டும் என்பது தான். நாம் திரி போடும் பொழுது ஒற்றை திரியாக இல்லாமல் இரட்டை திரியாக போடவேண்டும்.மேலும் ஒருமுறை விளக்கேற்றிவிட்டால், அந்த திரியை பயன்படுத்தக்கூடாது.
மறுநாள் விளக்கேற்றும்போது புது திரியை உபயோகப்படுத்த வேண்டும். அதேபோல, எரிந்த திரிகளை குப்பையில் போடாமல், தினமும் மாற்றும் திரிகளை சேர்த்து வைத்து ஓரளவு திரிகள் சேர்ந்ததும் வீட்டிலுள்ளவர்களை கிழக்கு பக்கமாக உட்கார வைத்து, அவர்களக்கு திருஷ்டி கழிக்கலாம்.
இறுதியில், திருஷ்டி கழித்த திரிகளை வீட்டு வாசலில் வைத்து கொளுத்திவிட வேண்டும். இதனால் வீட்டிலுள்ள துர்சக்திகள் தீயில் எரிந்து, நன்மை பிறக்கும். மேலும் விளக்கு அணைக்கும் பொழுது வாயால் ஊதக்கூடாது.
ஏதேனும் பூக்கள் கொண்டு அணைப்பது தான் உகந்தது ஆகும். முக்கியமான விஷயமாக விளக்கேற்றும்போது, தீப்பெட்டியில் நேரடியாக ஏற்றாமல், ஊதுபத்தியை பற்ற வைத்து, அதிலிருந்து விளக்கில் சுடரை ஏற்றலாம்.
அல்லது அகல் விளக்கை ஏற்றிக்கொண்டு, அதை வைத்து, தீபத்தை ஏற்றலாம். தீப்பெட்டிகள் பொதுவாக, நல்லதுக்கும் ஏற்றுவார்கள், கெட்டதுக்கும் ஏற்றுவார்கள் என்பதால், நேரடியாக தீப்பெட்டியை பூஜைகளில் பயன்படுத்தக்கூடாது என்பார்கள்.
அதே போல் விளக்கு திரி ஒருபொழுதும் கருக விடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.அவ்வாறு திரி கருகினால் வீட்டில் பிரச்னைகள் உருவாகும் என்பது ஐதீகம்.அவ்வாறு சமயங்களில் திரி கருகும் நிலை இருந்தால் உடனடியாக பூக்கள் கொண்டு அணைக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |