வீட்டு பூஜை அறையில் வைக்ககூடாத சுவாமி படங்கள்
இறைவழிபாடு என்பது இந்துக்களின் பிரிக்க முடியாத வழக்கம் ஆகும். நாம் தினசரி கோவிலுக்கு செல்கிறோமோ இல்லையோ வீட்டிலாவது இறைவனின் உருவ படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம்.
நமது வீடுகளில் வைத்துள்ள இறைவனின் உருவ படங்களில் சில படங்களை நாம் மாட்டி வழிபடக்கூடாது என சான்றோர்கள் செல்வது வழக்கம். அது பொய் அல்ல முழுக்க முழுக்க உண்மை.
இறைவனின் சில உருவ படங்களை நாம் வைத்து வழிபட்டு வந்தால் நம் குடும்பத்திற்கும் உடலுக்கும் ஆகாது.வீட்டு பூஜை அறையில் வைக்ககூடாத சுவாமி படங்கள் பற்றி பார்ப்போம்
கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி.
தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம்.
தனித்த காளியும்.
கால கண்டன் படமும் வீடிற்கு ஆகாது.
சனிஸ்வர பகவானின் படம் வீட்டில் வைக்க கூடாது.
நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது
சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது.
ருத்ரதாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் கோபவேசமாக தவநிலையிலுள்ளதும், தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகைபடங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |