கொள்ளையனுக்கு பாடம் புகுத்திய முருகப்பெருமான்
நம் அனைவருக்கும் சில நேரங்களில் செய்வதறியாது பயம் தேவை இல்லாத கற்பனை குழப்பத்தால் சிரமப்படுவோம்.அந்த வேளையில் மனம் சரியான விடை கிடைக்காமல் வேதனைப்படும்.
அப்படி மனம் வருந்தும் வேலையில் நாம் தரிசிக்க வேண்டியர் வேலவர்,பொதுவாகவே முருகனையும் அவரின் வேலையும் பார்த்தாலே மனம் லேசாகி விடும் அதிலும் மதுரை உசிலம்பட்டி புத்துார் இருக்கும் முருகப்பெருமானை தரிசித்தால் பிரச்னை மன குழப்பங்கள் தீரும் என்கின்றனர் பக்தர்கள்.
நாகாசுரன் என்ற கொள்ளைக்காரன் மக்களை துன்புறுத்தி வந்தான். இப்பகுதியை ஆட்சி செய்த மன்னரால் கூட அவனை அடக்க முடியவில்லை. ஆதலால் அந்த மன்னன் முருகப்பெருமானிடம் தஞ்சம் அடைந்தார்.
முருகனை தஞ்சம் அடைந்தால் வினைதீர்த்து மகிழவைப்பவன் அல்லவா?அப்படியாக ஒருநாள் நாகாசுரன் கொள்ளையடிக்க வந்த போது இளைஞன் வடிவில் முருகன் தோன்றி கால்களில் வீரதண்டை அணிந்து வாள், கத்தியுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார்.
அந்த கொள்ளையடினம் முருகப்பெருமான் நீ ' நல்லவனாக மாறு' என எச்சரித்தும் அவன் திருந்தவில்லை.
மேலும் அந்த கொள்ளையன் வந்தவர் முருகப்பெருமான் என அறியாமல் முருகனையே தாக்க முற்பட்டான் கருணைக்கடலான முருகப்பெருமான் சூரபத்மனைக் கொல்லாமல் மயிலும், சேவலுமாக மாற்றி அருள் செய்தவர்.
தன்னை தாக்க வந்த அவனை பிடித்து மன்னரிடம் ஒப்படைத்து விட்டு மறைந்தார். உண்மையை உணர்ந்த மன்னர் அங்கு முருகன் கோயிலைக் கட்டினார். இளைஞனாக வந்ததால் சுவாமிக்கு 'குமரன்' என்றும், தலத்திற்கு 'குமார கோயில்' என்றும் பெயர் வந்தது.
பாம்பு புற்றுகள் நிறைந்த பகுதி என்பதால் 'புற்றுார்' எனப்பட்டது. பிற்காலத்தில் புத்துாராகி விட்டது. இடுப்பில் கத்தி, காலில் தண்டை அணிந்தபடி வில்லேந்திய நிலையில் முருகன் முன்பு காட்சியளித்தார்.
திருமலை நாயக்கரின் காலத்தில் வள்ளி, தெய்வானை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதோடு முருகனுக்கு வேல் வைக்கப்பட்டது.
பிரகாரத்தில் தாணுமாலய லிங்கம் உள்ளது. அதாவது ஆவுடையார் (பீடம்) இல்லாமல் பாணம் மட்டும் உள்ள இந்த லிங்கத்திற்குள் பிரம்மா, திருமால், சிவன் மூவரும் உள்ளனர்.
அகத்திய முனிவருக்கு இங்கு மும்மூர்த்திகள் காட்சி தந்ததால் இவரை 'அகத்திய லிங்கம்' என்கின்றனர்.
காசி விஸ்வநாதர், விசாலாட்சி, இரட்டை விநாயகர், நாகர் சன்னதிகளும் உள்ளன.இங்கு செல்ல மன பயம் குழப்பம் நீங்கி வாழ்க்கை தெளிவடையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |