தெரியாமல் செய்யும் தவறு செல்வத்தை துடைத்து விடும்
நாம் ஒவ்வொரு பொருட்கள் வாங்க ஒவ்வொரு உரிய காலம் இருக்கிறது. அப்படியாக வீட்டை சுத்தம் செய்ய வீட்டில் எப்பொழுதும் தேவைப்படும் ஒரு முக்கியமான பொருள் துடைப்பம்.
அதை எந்த நாளில் வாங்கலாம் எந்த நாளில் வாங்க கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.செவ்வாய் அல்லது சனிக்கிழமை துடைப்பம் வாங்க சிறந்த மற்றும் மிகவும் மங்களகரமான நாள்.
இந்த நாட்களில் துடைப்பம் வாங்கினால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். நமது வீட்டில் செல்வம் பெருகும் பொருளாதார நிலை மேம்படும், லட்சுமி தேவியின் அருள் எப்போதும் பொழியும்.
அது தவிர பவுர்ணமி முடிந்து தேய்பிறை நாட்களில் செவ்வாய், சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்குவது நல்லது.
துடைப்பம் என்பது தேவை படும் பொழுது மாற்றி கொள்ள கூடியது தான்.அப்படியாக நாம் பழைய துடைப்பம் வீட்டில் இருந்து அகற்றி விட வேண்டும் என்று நினைத்தால் அதை செய்வாய் வெள்ளிக்கிழமைகளில் அல்லாமல் பிற நாட்களில் குப்பைகளில் போடுவது நன்மைகளை தரும்.
மேலும் துடைப்பம் யார்க்கும் தனமாக கொடுக்க கூடாது.
முடிந்தவரை உங்கள் கைகளால் காசுகொடுத்து கூட, யாருக்கும் துடைப்பத்தை வாங்கித் தராதீர்கள்.2 தென்னங்குச்சி விளக்குமாறு, பூந்துடைப்பம் போன்ற இயற்கையான துடைப்பங்களை பயன்படுத்துவது நல்லது.
இதுபோன்ற பழைய துடைப்பங்களை வெட்ட வெளியில் வைத்து எரித்து விடுவது நல்லது. அது சாம்பலாகி காணாமல் போய்விடும்.
எனவே பழைய துடைப்பத்தை எரித்து விடலாம் தவறில்லை.
அதே நேரத்தில் நாம் பயன்படுத்திய துடைப்ப குச்சிகளை காகம் குருவி பறவை இவைகளெல்லாம் கூடு கட்டுவதற்கு எடுத்துக்கொண்டு போவது நம் குடும்பத்திற்கு நல்ல பலனைத் தருவதாக சொல்லப்பட்டுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |