பங்குனி உத்திரம்: 11 ரூபாய் போதும் முருகப்பெருமானின் முழு அருள் பெறலாம்
நம்முடைய இந்து மத பண்டிகைகளில் பங்குனி உத்திர திருநாள் மிகவும் விசேஷமான நாளாக இருக்கிறது. இந்த 2026 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் ஏப்ரல் 1 1ஆம் தேதி புதன்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் தான் முருகப்பெருமான் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் திருக்கல்யாணம் நடைபெற்றது.
தமிழ் வருடத்தில் பன்னிரெண்டாவது மாதமான பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் இணையும் இந்த நாளில் பக்தர்கள் அதிகாலை எழுந்த நீராடி நாள் முழுவதும் உபவாசம் இருந்து மாலை நேரங்களில் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.

அதன் பிறகு எளிய உணவுகளை எடுத்துக்கொண்டு அவர்கள் விரதத்தை முடிப்பார்கள். இவ்வாறு பங்குனி உத்திர நாளில் விரதமிருந்து வழிபாடு செய்யும் பொழுது குடும்பத்தில் ஒற்றுமை வீடுகளில் தடைபட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை நம்பிக்கை.
அதேபோல், இந்த நாளில் வீடு கட்டுதல் திருமணம் குழந்தை பாக்கியம் வேலை வாய்ப்பு போன்ற வேண்டுதல்களுக்காக பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்கிறார்கள்.
மேலும், பங்குனி உத்திர வழிபாடுகளில் முக்கிய வழிபாடாக ஒரு வெள்ளை தாளில் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை எழுதி அதனுடன் ரூபாய் 11 காணிக்கையாக சேர்த்து மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி அருகில் இருக்கக்கூடிய முருகன் கோவில் அல்லது நமக்கு பிடித்த முருகன் ஆலயம் சென்று அங்கு உண்டியலில் செலுத்தி பிரார்த்தனை செய்வது வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள்.

பிறகு அவர்கள் வேண்டுதல் நிறைவேறிய பின்னர் அடுத்த ஆண்டு பங்குனி உத்திரம் அன்று அன்னதானம் அல்லது அவர்கள் என்ன நேர்த்திக்கடன் வேண்டுதல் வைத்திருக்கிறார்களோ அவை நிறைவேறுவதுவாக ஐதீகம்.
அப்படியாக, பங்குனி உத்திரத்தன்று கட்டாயம் நாமும் இந்த முறையில் வழிபாடு செய்தால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறி முருகப்பெருமானுடைய முழு அருளையும் பெறலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |