அடிக்கடி கெட்ட கனவுகளால் அவதிப்படுகிறீர்களா? இந்த ஒரு பரிகாரம் செய்து பாருங்கள்
இன்றைய காலங்களில் மனிதர்களுக்கு ஒரு நல்ல உறக்கம் வருவது கடினமாக இருக்கிறது. அதையும் மீறி நல்ல உறக்கம் கொண்டால் நிறைய கெட்ட கனவுகள் வருவதையும் நாம் பார்க்க முடிகிறது. அந்த கெட்ட கனவுகளால் நாம் பல நேரங்களில் சில தடுமாற்றம் அடைவது உண்டு.
அதாவது தூக்கத்தில் யாரோ அழுவது போல் இருக்கும், கருப்பாக உருவம் தெரிவது போல் தோன்றும், இனம் புரியாமல் பயம் உருவாகும், செய்வினை ஏவல் செய்தது போல் ஒரு அச்சம் தோன்றும். யாரோ ஒருவர் துரத்திக் கொண்டிருப்பது போலும் அவர்கள் உணர்வார்கள். ஒரு சிலர் இவ்வாறு கனவுகள் வரும்போது உடனடியாக எழுந்து அமர்வதையும் நாம் பார்க்க முடிகிறது.

ஒரு சிலருக்கு அதற்குப் பிறகு தூக்கமே வருவதில்லை. இவ்வாறு அவதிப்படுபவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை மனதார வழிபாடு செய்கின்ற பொழுது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவதிப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமையன்று அருகம்புல் பறித்து ஒரு வெள்ளை பையில் போட்டு விநாயகர் ஆலயத்திற்கு சென்று ஒருமுறை வலம் வந்து சுவாமியை தரிசித்த பிறகும் அந்த வெள்ளை பையை வீட்டிற்கு எடுத்து வந்து தலையணையாக அருகம்புல் அந்த வெள்ளை பை பயன்படுத்தி உறங்கினால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.
யாராவது நமக்கு தீங்கு செய்வது என்று நினைத்து பில்லி, சூனியம், ஏவல் வைத்திருந்தாலும் அது அவர்களுக்கு திரும்பி அந்த பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |