வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலக யார் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்?
இந்த உலகத்தில் இறை வழிபாடு என்பது நம்முடைய ஆன்மாவை மேன்மைப்படுத்த கூடியதாக இருக்கிறது. செய்வதறியாத நிற்கின்ற நேரத்தில் நம்மை கை கொடுத்த தூக்கி விடக் கூடிய அற்புத சக்தியாக இறைசக்தி உள்ளது.
பலரும் இறைவழிபாடு செய்கின்ற நேரத்தில் விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வது உண்டு. அப்படியாக, என்ன விரதம் இருந்தால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
பொதுவாக, நாம் இறைவழிபாடு செய்வது நல்ல பலன்கள் கொடுத்தாலும் விசேஷமான நாட்களில் நாம் வழிபாடு செய்யும் பொழுது அதீத பலன்களை பெறலாம்.
அந்த வகையில், நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட விசேஷ பலன்கள் இருக்கிறது. அதை நாம் தெரிந்து கொண்டு அந்த தினங்களில் விரதமிருந்து வழிபாடு செய்கின்ற பொழுது நம்முடைய வாழ்க்கை மேன்மை அடையும்.

குழந்தை வரம் பெற:
ஒரு சிலருக்கு தவமிருந்து தான் ஒரு சில விஷயங்களை பெற வேண்டும் என்கின்ற விதி கணக்கு இருக்கும். அவ்வாறு சிலருக்கு குழந்தை பிறப்பதில் தாமதத்தை சந்தித்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் எந்த ஓரு கவலை அடையாமல் கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்கின்ற பொழுது இறைவன் அருளால் அந்த முருகப்பெருமானே நமக்கு குழந்தையாக வந்து கிடைப்பார்.
குடும்பத்தில் அமைதி உண்டாக:
சில குடும்பங்களில் அமைதி என்பது இருப்பதே இல்லை. எப்பொழுதும் சண்டை மன குழப்பங்கள் வீண் விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு நடக்கக்கூடிய அபிஷேகத்தில் கலந்துகொண்டு அந்த அபிஷேகத்தை கண் குளிர காண்கின்ற பொழுது அவர்கள் மனதிலும் குடும்பத்திலும் மன அமைதி கிடைக்கிறது.
சகல நன்மைகளையும் பெற:
சிவ வழிபாடுகளில் மகா சிவராத்திரி என்பது மிகவும் விஷேசமானதாக இருக்கிறது. அந்த மகா சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபாடு செய்யும் பொழுது நாம் நினைத்த காரியங்கள் நடக்கிறது.
தடைகள் அகல:
ஒரு சிலருக்கு எதை எடுத்தாலும் அங்கு முதலில் தடை வந்து நிற்கும். அவ்வாறு அவர்கள் தடையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் பற்றி கொள்ள வேண்டிய தெய்வமாக விநாயகர் இருக்கிறார். அவ்வாறு விநாயகர் உரிய தினமாக சங்கடஹர சதுர்த்தி இருக்கிறது. அந்த தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது எப்பேர்ப்பட்ட தடையும் விலகுகிறது.

நினைத்தது நிறைவேற:
முருகப்பெருமானை ஒருவர் சரண் அடைகிறார்கள் என்றால் அவர்களுடைய வழிபாடும் வலிமையாகவும் பிடிவாதம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு தான் நினைத்ததை அடைய வேண்டும் என்கின்ற குறிக்கோள் இருந்தால் அவர்கள் வைகாசி விசாக தன்ற முருகப்பெருமானை பற்றி கொண்டு வழிபாடு செய்ய நிச்சயம் நினைத்ததை பெறலாம்.
மாங்கல்ய பாக்கியம் பெற:
ஒவ்வொரு பெண்களுக்கும் குடும்பம் தான் இரு கண்கள் போன்றது. ஆக, தங்களுடைய குடும்பத்தில் நலனுக்காக இவர்கள் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பொழுது மகாலட்சுமியின் அருளால் குடும்ப நலன் பெறுகிறது.
மோட்சம் கிடைக்க:
ஒருவருக்கு மோட்சம் கிடைத்து பிறவி பலனை அடைய வேண்டும் என்கின்ற பொழுது அவர்கள் வைகுண்ட ஏகாதசியை பற்றிக் கொள்வது சிறந்தது.
செல்வம் பெருக:
உலகத்தில் பிறந்த எல்லோருக்கும் அதிர்ஷ்டசாலியாகவும் பணக்காரர்களாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். செல்வம் இருந்தால் தான் இந்த உலகத்தில் மதிப்பு என்கின்ற நிலையும் மாறிவிட்டது. அப்படியாக மன அமைதியை கொடுக்கின்ற இறைவன் தான் செல்வத்தையும் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு செல்வ வளம் பெற்று வாழ்கையில் சிறந்த விளங்க வேண்டும் என்றால் கிருஷ்ணர் ஜெயந்தியை பற்றி கொண்டு கிருஷ்ணரை சரண் அடைந்து விரதம் இருந்து வழிபாடு செய்ய செல்வந்தராகும் பாக்கியம் கிடைக்கும்.
நினைத்த வேலை கிடைக்க:
ஒரு சிலருக்கு படித்த படிப்பிற்கும் பார்க்கின்ற வேலைக்கும் தொடர்பு இருக்காது. அவ்வாறு இருப்பவர்கள் பௌர்ணமி விரதத்தை மேற்கொள்கின்ற பொழுது நினைத்த வேலையை அவர்கள் பெறலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |