இந்த கிழமையில் தவறியும் இந்த தெய்வத்தை வழிபாடு செய்து விடாதீர்கள்
நம்முடைய இந்து மதத்தில் ஒவ்வொரு கிழமைகளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியதாக இருக்கிறது. அந்த கிழமைகளில் அந்த தெய்வத்தை வழிபாடு செய்யும்பொழுது அவர்களுடைய முழு அருளை நாம் எளிதாக பெற்று விடலாம்.
அப்படியாக, நாம் இப்பொழுது எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஞாயிறு:
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான், காளி பைரவர், சிவபெருமான் ஆகியவர்களுக்கு உயரிய தெய்வமாக இருக்கிறது, ஆக, இந்த கிழமைகளில் நாம் இவர்களை சென்று வழிபாடு செய்யும் வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும், உயர் பதவிகள் தேடி வரும்.

திங்கள்:
திங்கட்கிழமை நடராஜர், அம்பிகை, சந்திர பகவான் ஆகியவரை வழிபாடு செய்வதற்கு உரிய தினமாக இருக்கிறது. இந்த தினங்களில் இவர்களை வழிபாடு செய்யும் பொழுது கலைத்துறையில் சிறந்து விளங்கலாம், அதோடு மனதில் ஏற்படுகின்ற குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும்.
செவ்வாய்:
செவ்வாய்க்கிழமை விநாயகர், முருகப்பெருமான், நரசிம்மர் ஆகியோரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக இருக்கிறது. இந்த தினங்களில் இவர்களை சென்று வழிபாடு செய்யும் பொழுது கணவன் மனைவி ஒற்றுமை, எதிரிகள் தொல்லை இவை விலகும். அதேபோல் திருமணம் தடை விலகும்.
புதன்:
படிப்பிற்குரிய கடவுளாக திகழக்கூடிய ஹயக்ரீவர், விஷ்ணு, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை இந்த புதன்கிழமைகளில் சென்று வழிபாடு செய்யும்பொழுது பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கல்வியில் உள்ள தடைகள் விலகும்.

வியாழன்:
ஒருவருக்கு ஜாதகத்தில் குரு யோகம் சிறப்பாக இருந்தால்தான் அவர்களுடைய வாழ்க்கையில் எல்லாம் தடை இன்றி பெற முடியும். அந்த வகையில். வியாழ பகவானுக்கு உரிய தினமாக வியாழக்கிழமை உள்ளது. இந்த தினத்தில் நாம் தட்சணாமூர்த்தி, ராகவேந்திரர், சாய்பாபா ஆகியோரை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.
வெள்ளி:
இந்து மதத்தில் வெள்ளிக்கிழமை மிகவும் மங்களகரமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாள்தான் லட்சுமிதேவி, ரங்கநாதர், மாரியம்மன் ஆகியவருக்கு உரிய நாளாக இருக்கிறது. இந்த வெள்ளிக்கிழமைகளில் நாம் இவர்களை மனதார விரதமிருந்து வழிபாடு செய்யும் போது செல்வ வளம் கிடைத்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்கின்றோம்.
சனி:
சனிக்கிழமை எல்லோரும் அறிந்தது போல் ஏழுமலையான், சனீஸ்வரர், ஆஞ்சநேயர் வழிபாட்டிற்கு உரிய நாளாக இருக்கிறது. இந்த தினங்களில் இவர்களை சென்று வழிபாடு செய்யும்பொழுது சனி தோஷம் போன்றவை விலகி வாழ்க்கையில் கர்ம வினைகள் குறைந்து நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |