முருகப்பெருமானின் மூலமந்திரம் சொல்வதால் கிடைக்கும் நன்மைகள்
முருகப்பெருமான் கலியுக வரதன் அவனை வழிபட நம் வாழ்க்கையில் நிச்சயம் எண்ணற்ற பலன்களை பெறலாம். அப்படியாக, முருகப்பெருமானின் மூல மந்திரம் சொல்வதால் நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்காத அதிசயத்தை சந்திக்கமுடியும். நாம் இப்பொழுது முருகப்பெருமானின் மூல மந்திரத்தை எவ்வாறு சொல்லவேண்டும் என்று பார்ப்போம்.
முருகப்பெருமானின் "ஓம் சரவணபவ" என்னும் மூலமந்திரத்தை, யார் ஒருவர் முறையாக சொல்லி வழிபடுகிறர்களோ அவர்களுக்கு ஏழு பிறவியிலும் செய்த புண்ணியம் சேரும்.
முருகப்பெருமானின்"சரவணபவ"என்னும் மூலமந்திரத்தை சொல்லி வழிபட அவர்களுக்கு உலகில் அனைத்து செல்வ வளமும் கிடைக்கும்.
முருகப்பெருமானின்"ரவணபவச" என்னும் மூலமந்திரத்தை உச்சரித்தால் வாழ்க்கையில் சந்தித்த துன்பங்கள் அனைத்தும் விலகும்.
முருகப்பெருமானின்"வணபவசர" என்னும் மூலமந்திரத்தை முறையாக உச்சரிக்க எதிரிகள் தொல்லையே இருக்காது.
முருகப்பெருமானின்"ணபவசரவ" என்னும் மூலமந்திரத்தை முறையாக சொல்லி பூஜை செய்து வழிபட நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படும்.
முருகப்பெருமானின்"பவசரவண" என்னும் மூலமந்திரத்தை சொல்லி வழிபட நம்முடைய தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
முருகப்பெருமானின்வ "சரவணப" என்னும் மூலமந்திரத்தை சொல்லி வழிபட முருகனின் அருளால் முக்தி கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |