தீராத எதிரிகள் தொல்லை விலக இந்த ஒரு வழிபாட்டை செய்து பாருங்கள்
நேரம் சரி இல்லை என்றால் கட்டாயம் திரும்பும் திசை எல்லாம் பிரச்சனை வந்து விடும். அதிலும் முக்கியமாக நாம் சாதாரணமாக பேசக்கூடிய விஷயம் கூட தவறாக எடுத்துக் கொண்டு நமக்கு ஒரு எதிரிகள் கூட்டம் சேர்ந்து விடுவார்கள். அப்படியாக நீண்ட நாட்களாக எதிரிகள் தொல்லை மற்றும் எந்த காரியங்களையும் சரியாக செய்ய முடியாத ஒரு நிலை இருப்பவர்களுக்கு கட்டாயம் அவர்கள் வாழ்க்கையானது ஒரு இருள் சூழ்ந்ததாக இருக்கக்கூடும்.
அதாவது இவர்கள் தெருவில் நடந்து சென்றாலே இவர்களை பிடிக்காத பல நபர்களை இவர்கள் கடந்து செல்ல வேண்டிய நிலைக்கு இந்த கெட்ட காலமானது தள்ளிவிடும். அந்த வகையில் திடீரென்று எந்த ஒரு தவறும் செய்யாமல் ஒரு இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான தீப வழிபாடு பற்றி பார்ப்போம்.

இந்த பிரபஞ்சத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால் கட்டாயமாக நமக்கு ஏற்படக்கூடிய எல்லா பாதிப்புகளுக்கும் அல்லது எல்லா வினாக்களுக்கும் நாம் விடையை தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் வீடுகளில் துன்பம் உங்களை துரத்திக் கொண்டிருக்கிறது என்றால் கண்ணை மூடிக்கொண்டு செய்ய வேண்டிய ஒரே காரியம் தினமும் தவறாமல் விளக்கேற்றி வழிபாடு செய்வது.
முதலில் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்ய தொடங்கி விட்டோம் என்றால் நிச்சயம் வெகு விரைவில் நல்ல மாற்றத்தை நாம் பார்த்துவிடலாம். எதிரிகள் தொல்லை அதிகம் சந்திப்பவர்கள் வீட்டின் தென்கிழக்கு அல்லது வடமேற்கு மூலையில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இதற்கு ஒரு அகல் விளக்கு இருந்தால் போதுமானது.
அதில் வேப்பெண்ணெய் ஊற்றி வெள்ளை நிற பஞ்சு திரி போட்டு இந்த தீபத்தை நாம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீபத்தை நாம் குளிர வைக்க கூடாது. அதுவாகவே குளிர்ந்து விட வேண்டும். இப்படி தினமும் நாம் வேப்பெண்ணெய் தீபத்தை வீட்டில் இந்த மூலைகளில் ஏற்றுவதன் மூலம் நிச்சயம் எதிரிகள் திசை தெரியாமல் சென்று விடுவார்கள்.

ஒருவேளை முழுமையாக எதிரிகள் தொல்லை நீங்காமல் இன்னும் அதிகமான தொல்லை வருகிறது என்றால் வெள்ளிக்கிழமை வரக்கூடிய ராகு காலத்தில் 10.30 மணியிலிருந்து 12 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய வடக்கு நோக்கி திசையில் இருக்கும் காளி, பிடாரியம்மன் அல்லது துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு இரண்டு அகல் விளக்கு எடுத்துக்கொண்டு ஒரு விளக்கில் வேப்ப எண்ணையும் இன்னொரு விளக்கில் இலுப்பை எண்ணெயும் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வர நிச்சயம் எதிரிகள் தொல்லை என்பது உங்களுக்கு இருக்காது. ஆக எட்டு திசைகளும் உங்களை கெட்ட நேரங்கள் சூழ்ந்து விட்டது என்று மனம் வருந்தாமல் உங்களுடைய நியாயம் வெல்வதற்கு சில காலங்கள் எடுக்கிறது என்று குழப்பம் கொள்ளாமல் இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |