ராகு கேது கால சர்ப்ப தோஷமுள்ளவர்கள் புரட்டாசி மாதத்தில் இந்த பரிகாரங்கள் செய்ய தவறாதீர்கள்
புரட்டாசி மாதம் என்பது பெருமாள் வழிபாட்டுக்குரிய மிகச் சிறந்த மாதமாகும். மேலும் எவருடைய ஜாதகத்தில் ராகு கேது மற்றும் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம், தார தோஷம் போன்ற சர்ப்ப தோஷங்களால் பாதிப்பு இருக்கிறதோ அவர்கள் கருடாழ்வார் வழிபாடு செய்வதால் அவர்களுடைய தோஷங்கள் அனைத்தும் நொடியில் விலகும் என்பது நம்பிக்கை.
அந்த அளவிற்கு புரட்டாசி மாதம் மிக சிறந்த மாதமாக கருதப்படுகிறது. அப்படியாக புரட்டாசி மாதத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
1. புரட்டாசி மாதங்களில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பது நமக்கு பல வகையான நன்மைகளை பெற்றுக் கொடுப்பதாக சொல்கிறார். அதோடு ஜாதகத்தில் சனி மற்றும் புதன் திசை நடப்பவர்கள் புரட்டாசி மாதத்தில் எள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய தடைகள் யாவும் விலகுகிறது.
2. புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே பல பெருமாள் கோயில்களில் வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் நமக்கு பெரும் புண்ணியம் சேர்கிறது.
3. மேலும் திருப்பதி வெங்கடாசலபதியை பல குடும்பங்கள் தங்களுடைய குலதெய்வமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் புரட்டாசி மாதத்தில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.
4. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார் என்பது புராணம். அதனால் அவரால் ஏற்படும் துன்பங்கள் விலக புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவதும் சனிபகவானை வணங்குவதும் நமக்கு நன்மை தருகிறது.
5. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் கடன் கொடுக்கவோ வாங்கவோ தவிர்த்து தர்ம காரியங்கள் செய்வது நன்மை தரும்.
6. அதோடு ராகு, கேது, கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம் தார தோஷம் இருப்பவர்கள் புரட்டாசி மாதம் கருடாழ்வார் வழிபாடு செய்வது அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தையும் போக்கி நல்ல பலனை வழங்குகிறது.
7. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளையும் மனிதர்கள் தவிர்க்க முடியாத ஒரு மிகச்சிறந்த நாளாகவும் வழிபாட்டிற்குரிய விரத நாளாகவும் அமைந்திருப்பது இந்த மாதத்தின் விசேஷமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







