இந்த ஒரு வழிபாட்டை புரட்டாசி மாதத்தில் செய்தால் எப்பேர்ப்பட்ட கஷ்டமும் விலகும்

By Sakthi Raj Sep 26, 2026 10:54 AM GMT
Report

புரட்டாசி மாசம் என்பது பெருமாள் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதமாக இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய எல்லா நாட்களுமே பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாள் என்றாலும் புரட்டாசி மாதத்தில் வருகின்ற ஏதாவது ஒரு சனிக்கிழமைகளோ அல்லது புரட்டாசி மாதங்களில் வரக்கூடிய எல்லா சனிக்கிழமைகளிலும் உங்களால் எப்போ முடிகிறதோ அந்த நாளில் பெருமாளை மனதார நினைத்து மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம்.

சுத்தமான பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய், சுத்தமான நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு அதை விளக்கு வடிவில் செய்து சுத்தமான நெய்விட்டு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த ஒரு வழிபாட்டை புரட்டாசி மாதத்தில் செய்தால் எப்பேர்ப்பட்ட கஷ்டமும் விலகும் | Purattasi Mavillaku Worship Removes All Troubles

2026: அக்டோபர் மாதம் கடன் தொல்லையிலிருந்து விடுபடும் விருச்சிக ராசியினர்

2026: அக்டோபர் மாதம் கடன் தொல்லையிலிருந்து விடுபடும் விருச்சிக ராசியினர்

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலன்களை கொடுக்கும்.

வழிபாடு செய்யும் முறை:

பெருமானின் படத்திற்கு துளசி வாசனை மலர்கள் படைத்து விளக்கேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பெருமாளின் படத்திற்கு முன்பாக சிறிய வாழை இலையை பரப்பி அதன் மீது மாவிளக்கை வைத்து ஏற்ற வேண்டும்.

இந்த ஒரு வழிபாட்டை புரட்டாசி மாதத்தில் செய்தால் எப்பேர்ப்பட்ட கஷ்டமும் விலகும் | Purattasi Mavillaku Worship Removes All Troubles

மகாபாரதம்: மனதை அடக்குவது என்பது காற்றை அடக்குவதைப் போல கடினமானது..

மகாபாரதம்: மனதை அடக்குவது என்பது காற்றை அடக்குவதைப் போல கடினமானது..

இந்த விளக்கு தானாக குளிரும் வரையோ அல்லது குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் ஆவது எரியும் படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு பெருமாளுக்கு உரிய மந்திரங்களை பாராயணம் செய்வது நல்லது.

அதோடு மனதார அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை பெருமாள முன்பு வைக்க வேண்டும். பிறகு பெருமாளுக்கு படைத்த மாவிளக்கை நாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் கொடுத்து சாப்பிடலாம். இதனால் நமக்கு ஒரு நல்ல முன்னேற்றமும் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகளும் விலகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US