10ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ராசியில் பெயர்ச்சியாகும் ராகு- ராஜயோகம் யாருக்கு?
ஜோதிடத்தில் நவகிரகங்களாக கருதப்படும் ராகு பகவான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி ஆகிறார். இதன் விளைவாக 3 ராசிகளுக்கு மிகப்பெரிய வளர்ச்சியும் அதிர்ஷ்டமும் அவர்களுக்கு காத்திருப்பதாக சொல்கிறார்கள்.
மேலும் ராகு பகவான் தான் ஒரு மனிதருக்கு திடீர் வளர்ச்சியை கொடுத்து அவர்களை வாழ்க்கையில் உயர்த்தி விடக் கூடிய ஒரு அற்புதமான கிரகமாக இருக்கிறார். அப்படியாக ராகு பகவானுடைய இந்த பெயிற்சியானது எந்த மூன்று ராசிகளுக்கு மிகப் பெரிய பலனை கொடுக்கப் போகிறது என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசிக்கு இந்த பெயர்ச்சியானது அவர்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாறுதலையும் சமுதாயத்தில் ஒரு மரியாதையும் கொடுக்கப் போகிறது. திடீர் பணவரவால் இவர்களுக்கு வாங்கிய கடன் அடையும் வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் ரீதியாக நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடிய அற்புதமான காலகட்டமாகும். பெயர் புகழ் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணை ரீதியாக நிறைய வளர்ச்சியை சந்திக்க போகிறார்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டு தொடர்புடைய தொழில் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய நிலை உருவாகும். ஏற்கனவே சொத்துக்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நல்ல முடிவை பெறும். உங்களுடைய பெயர் உயரக்கூடிய அற்புதமான கட்டமாகும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு ராகு பெயர்ச்சியானது அவர்கள் வாழ்க்கையில் தொழில் ரீதியாக இவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை தேடி கொடுக்கப் போகிறது. இவர்களுடைய முழு திறனை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகளை இவர் உருவாக்கி கொடுக்கப் போகிறார். வியாபாரத்தில் இவர்கள் நல்ல லாபத்தை பெற்று வாங்கிய கடன்களை அடைக்க கூடிய அற்புதமான காலகட்டமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







