ராகு பகவான் இடமாற்றத்தால் பண மழையில் நனைய போகும் ராசிகள்

By Sakthi Raj Jul 13, 2024 11:01 AM GMT
Report

 சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் இருக்கிறார். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் ஆகும்.

அந்த வகையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார் ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கடந்த ஜூலை எட்டாம் தேதி அன்று ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.

இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு மிக யோகத்தை வழங்க போகிறார்.அதை பற்றி பார்ப்போம்

ராகு பகவான் இடமாற்றத்தால் பண மழையில் நனைய போகும் ராசிகள் | Raghu Bagavan Idamattram Money Luck Astrolgy

ரிஷப ராசி

நீண்ட நாள் முடிவடையாமல் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவிற்கு வரும்.இவ்வளவு நாள் மன கவலைகள் கொடுத்த அனைத்து துன்பங்களும் விலகும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து உருவாகும்.வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

பணக்கஷ்டத்தை நீக்கும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு

பணக்கஷ்டத்தை நீக்கும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு


துலாம் ராசி

துலாம் ராசிக்கு திடீர் பணவரவு ராகு பகவான் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றார். புதிய வருமானத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

திடீர் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.அலுவலகத்தில் நல்ல மதிப்பு உண்டாகும்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ராகுவின் இடமாற்றம் நல்ல யோகத்தை கொடுத்தாலும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்கு திடீர் பண வரவு உண்டாகும். ராகுவின் நட்சத்திர இடமாற்றம் எல்லாம் சாதகமாக அமையும். பணம் சம்பந்தமான விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது அவசியம். பணவரவில் எந்த குறையும் இருக்காது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கணவன் மனைவி இடையே நல்ல அன்பு உண்டாகும். வெளிநாடு பயணத்திற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US