தீராத பிரச்சனையை தீர்க்கும் ராகு கால துர்க்கை அம்மன் விரதம்
மனிதனுக்கு துன்பம் என்பது புதிது அல்ல என்றாலும் ஒவ்வொரு துன்பம் வரும் பொழுது அதை கையாள்வது தான் மிக கடினமான ஒன்றாக அமைகிறது.துன்பம் என்று வந்து விட்டால் நாம் அதை கடந்து செல்வது எப்படி என்று யோசிப்பது தவிர்த்து,இறைவனிடம் நான் என்ன பாவம் செய்தேன் எனக்கு இவ்வளவு துன்பம் என்று புலம்பு தொடங்கிவிடுவோம்.
அப்படியாக வருகின்ற துன்பம் வெறும் சிறிது காலமே அதை கடந்து விட்டால் நினைத்த வாழ்க்கை வாழலாம்.அதற்கு தீராத மனவலிமையும் இறை நம்பிக்கையும் இருந்தால் போதுமானது.அந்த வகையில் துன்பம் தலைக்கு மேல் செல்லும் பொழுது நாம் துர்கை அம்மனை வழிபாடு செய்தால் அம்மன் துணையால் நாம் எதையும் ஜெயித்து விடலாம்.
நாம் இப்பொழுது முடிவிற்கே வராது என்று எண்ணிய பிரச்சன்னை முடிவு பெற ராகு கால நேரத்தில் துர்கை அம்மனுக்கு எவ்வாறு விரதம் இருந்து வழிபாடு செய்யலாம் என்று பார்ப்போம்.
அம்மன் வழிபாடு என்பது நமக்கு அசைக்க முடியாத வலிமையும் எதையும் சாதிக்கும் சக்தியும் கொடுக்கும்.பெண்கள் பலரும் துர்கை அம்மனுக்கு விரதம் இருந்து திருமண வரன்,குழந்தை பாக்கியம் வேண்டி வழிபாடு செய்வார்கள்.
அந்த வகையில் பிரச்சனையால் தவிப்பவர்கள் துர்கை அம்மனுக்கு மாலை 3 மணி முதல் 4.30 மணி வரையிலான ராகு காலத்தில், துர்க்கை தனித்திருக்கும் ஆலயம் சென்று ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி சாறு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு, அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
ஒரு பொழுதும் பிறர் ஏற்றிய விளக்கில் இருந்து நாம் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யக்கூடாது.மேலும் ஏற்றும் விளக்குகள் ஜோடியாக ஒருசேர தான் வைக்கவேண்டும்.நாம் ஏற்றும் தீப ஒளியானது அம்மனை நோக்கியவாறு சுடர்விட்டு எறியவேண்டும்.
நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை ஞாயிற்று கிழமை அன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையான ராகு கால வேளையில், மேற்குறிப்பிட்டவாறு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம்.
குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர,எதிர்மறை ஆற்றல் விலக வெள்ளிக்கிழமை கிழமை விரதம் இருந்து காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரையான ராகு கால வேளையில், எலுமிச்சைப் பழ விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
இந்த பூஜை செய்யும் பொழுது அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். நீங்கள் அர்ச்சனை செய்யவேண்டும் என்று எண்ணினால் அம்மன் பெயரில் அர்ச்சனை செய்த பிறகு விளக்கு ஏற்றலாம்.
அதோடு விளக்கு ஏற்றிய பிறகு அம்மனை 3 சுற்றுகள் வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும்.இதில் மிக முக்கியமான ஒன்று இந்த பிராத்தனை செய்து உடனே வீடு செல்ல கூடாது.மனம் அமைதி பெரும் வரையில் கோயிலில் அமர்ந்து வேண்டுதல் செய்ய வேண்டும்.
அதே போல் வீடு திரும்பியதும் வீட்டில் ஒரு நெய் விளக்கு ஏற்றி ஆராதனை செய்யவேண்டும்.இவ்வாறு செய்ய நிச்சயம் உங்கள் வீட்டில் அம்மனின் ஒளி பட்டு உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் எல்லாம் விலகி சந்தோசம் நிலவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |