தாண்டவமாடப்போகும் ராகு - பண மெத்தையில் 5 ராசிக்காரர்கள்
ராகு பகவான் டிசம்பர் 5 ஆம் தேதி கும்பத்தை விட்டு வெளியேறி மகர ராசிக்குள் நுழைகிறார். சனி பகவானின் சொந்த வீடான மகரத்திற்குப் பெயர்ச்சியாகிறார்.
பிற கிரகங்களைப் போல் அல்லாமல் எப்போதும் பின்னோக்கியே (வக்ர நிலை) நகர்வார். இது ஐந்து ராசிகளின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தவுள்ளது.

மேஷம்
தொடங்கும் எந்த வேலையிலும் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கும் இது சாதகமான நேரமாகும். குடும்ப உறவுகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர்.
கடகம்
அதிக பண ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
துலாம்
புதிய தொழில் தொடங்கலாம். பங்குச் சந்தை மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மாமியார் வீட்டில் இருந்து பண ஆதாயம் உண்டாகும். திடீர் பண வரவால் பொன், பொருள், ஆபரணம், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வீர்கள்.
தனுசு
உடல்நலப் பிரச்சனைகள் நீங்கும். சமூகத்தில் மரியாதை கூடும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
மகரம்
அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவி கிடைக்கும்.