நாளை(24-03-2025) பெண்கள் கடைபிடிக்கவேண்டிய சீதாதேவி விரதம்
உலகம் போற்றும் ராமாயணம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அப்படியாக, இராமாயணத்தில் அனைவரது மனதை கவர்ந்தவர் சீதா தேவி. அவர் பல இன்னல்கள் பொறுமை என்னும் ஆயுதம் கொண்டு, கடந்து வாழ்க்கையை போராடி வென்றார்.
எல்லா பெண்களுக்கும் தாங்கள் சீதா தேவி போல் குணத்திலும், அம்மையாருக்கு கிடைத்தது போல் நல்ல கணவனும் நமக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அவ்வாறு பொறுமையின் சிகரமான சீதா தேவி அவதரித்த தினம் நாளை பங்குனி 10 வது நாள் அதாவது மார்ச் 24 ஆகும்.
அன்றைய தினத்தில் அம்மையாரை வழிபட வாழ்வில் எல்லா செல்வமும் பெற்று நலம் பெறலாம். அந்த வகையில் நாளை சீதாதேவியை எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும் என்று பார்ப்போம். வாழ்க்கையில் துன்பம் என்பது இயல்பு என்றாலும் அதனை பொறுமையாக கடக்க சீதா தேவி நல்வழி காட்டுகிறார்.
சீதாதேவியின் பிரகாசமான முகம் பார்த்தாலே நம்முடைய இன்னல்கள் எல்லாம் தீர்ந்து போகும். அப்படியாக, நாளை திருமணம் ஆன பெண்கள் கணவனின் ஆரோக்கியமும் அவர்களின் குடும்ப சந்தோசம் வேண்டியும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவன் வேண்டியும் விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்ல பலன் அளிக்கும்.
இதற்கு காலையிலேயே எழுந்து குளித்து பூஜை அறையை தயார் செய்து, சீதா ராமனுடன் ஹனுமரும், லக்ஷ்மனும் இருக்கும் படத்தை மஞ்சள் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பிறகு அந்த படத்திற்கு துளசி மாலை தயார் செய்து அணிவிக்க வேண்டும்.
அதோடு சந்தனத்துடன் பன்னீர் கலந்து பொட்டு வைத்து குங்குமம் வைத்து சீதா தேவிக்கு நைவேத்தியமாக, சர்க்கரை பொங்கல் தயார் செய்து வாழை இலையில் படையுங்கள். முடியாதவர்கள் அவர்களுக்கு என்ன இயலுமோ அதை படைத்து வழிபாடு செய்யலாம்.
அதோடு பூஜை அறையில் சீதாதேவியின் சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவது சிறந்த பலன் அளிக்கும். பிறகு ராமாயணம் வாசிக்கலாம். அதோடு வெற்றிக்கான மந்திரம் "ஸ்ரீ ராம ஜெயம்" 108 முறை சொல்லி வழிபடலாம்.
முடிந்தவர்கள் 108 முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வழிபாடு செய்யலாம். நாளை கோயிலில் கோவிலில் சீதாராம கதைகளை சொல்லுவார்கள். அதை கேட்டு ரசிக்கலாம். சீதா தேவியின் கதையை கேட்டு வழிபாடு செய்வதே நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் எல்லாம் தீர்க்கும்.
ஆக, நாளை நம் மனதிற்கு ஏற்ப நல்வாழ்வு கிடைக்க சீதாதேவியை விரதம், இருந்து வழிபட அம்மையின் அருளால் எல்லாம் வெற்றிகாரமாக அமையும்.
ஸ்ரீ ராம ஜெயம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |