கனவில் ராமர் வருகிறாரா? இதுதான் காரணம்
கனவு என்பது மனிதர்கள் தடுக்க முடியாத ஒன்று.அந்த கனவு எப்படி வேண்டுமானலும் வரலாம்.வருகின்ற கனவை கணிக்க முடியாது.ஆனால் அதற்கு அர்த்தங்களை தெரிந்து கொள்ள முடியும்.அப்படியாக ஒருவரது கனவில் ராமர் வருகிறார் என்றால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம்.
பொதுவாக தெய்வங்கள் கனவில் வருவது என்பது மிகவும் அரிது.அவராக விஷ்ணுவின் அவதாரமான ராமர் கனவில் வருகிறார் என்றால் கட்டாயம் அதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் இருக்கும்.ராமர் வெற்றிக்குரிய அடையாளமாக பார்க்கப்படுகிறார்.
அவரை வணங்கிட நாம் நினைத்த காரியங்கள் நடக்கும்.அதே போல் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு ராமர் போல் நல்ல கணவன் வேண்டி பிராத்தனை செய்வார்கள்.அப்படியாக நம்முடைய கனவில் ராமர் வருகிறார் என்றால் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை விரைவில் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
அதே சமயம் எது நடந்தாலும் உங்களுடைய கடமையை செய்ய தவறாதீர்கள் என்று உணர்த்தவும் ராமர் கனவில் வருவதாக சொல்லப்படுகிறது. அதே போல் ராமர் கோயில் கனவில் வந்தால் அந்நபரின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
மேலும் நீண்ட நாட்களாக முடிவிற்கு வராத பிரச்சனை ஒன்றும் விரைவில் முடிவிற்கு வரும் என்று சொல்லப்படுகிறது.ராமர் இருக்கும் இடம் எல்லாம் ஹனுமான் இருப்பார் என்பது ஐதீகம்.அப்படியாக கனவில் ராமரும் ஹனுமனும் சேர்ந்து வந்தால் உங்கள் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக ஆக போகிறது.
இவ்வாறான கனவுகள் அல்லது திடீர் என்று உங்களுக்கு ராமர் மீது பக்தியும் வழிபாடு வந்தாலும் உங்கள் வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் அனைத்தும் விலகி வெற்றிகள் குவிய போகிறது என்று அர்த்தம்.
ஜெய் ஸ்ரீ ராம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |