பெண்கள் வீட்டில் சமைக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய ஆன்மீக விஷயங்கள்
ஒருவர் வீட்டில் சமையல் செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.அப்படியாக பெண்கள் சமைக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம். நாம் சமைக்கும் பொழுது ஏதாவது ஒரு அளவில் அரிசி எடுப்போம்.
அந்த அளவை மூன்று பங்காக எடுத்து கொள்ளவேண்டும். அதில்,முதல் தடவை எடுக்கும் போது இது பெருமாளுக்கு என்றும் இரண்டாம் அளவு எடுக்கும் போது இது தாயாருக்கு என்றும் மூன்றாவது தடவை எடுக்கும் போது இது ஆசார்யனுக்கு அல்லது குருவுக்கு என்று சொல்லி மனதார நினைத்து சமையல் செய்து வர வீட்டில் பொருளாதாரம் சிறப்பான முறையில் அமையும் என்று சொல்கிறார்கள்.
அதாவது நாம் பெருமாளுக்கு,தாயாருக்கு,குருவுக்கு என்று சொல்லி சமைக்கும்அரிசியை வருணதேவனும் அக்னியும் வாயு பகவானின் துணை கொண்டு பல மடங்காக கொண்டு நாம் சாப்பிடும் பக்குவத்தில் அதை கொடுக்கிறார்கள்.
ஆக இவர்களின் அருள் பெற்று நாம் செய்யும் காரியமும் பல மடக்கில் வெற்றியோடு திரும்ப நம்மை வந்து சேர நாம் சமைக்கும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி பார்ப்போம்.
கீர்த்தி பாண்டம், திரெளபதி கலயம்,
பாண்டவர் யக்ஞம், பஞ்ச பாண்டவர்,
போஜனம், அரிசி அலை மோத,
அன்னம் மலை போல் குவிய அர்ஜுனன்
படை வந்தாலும். மறித்து உலை வைக்க
மாட்டேன், ஸ்ரீ கிருஷ்ணா! உன்
அக்ஷயம் அக்ஷயம் அக்ஷயம்.
இது மிகவும் அதிர்ஷ்டமான மந்திரம்ஆகும்.இதை சொல்லிக்கொண்டு சமைக்கும் பொழுது வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலை மற்றும் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |