தலையில் இரட்டை சுழி இருந்தால் 2 திருமணமா? ஜோதிடம் சொல்வதென்ன..?
தலையில் உள்ள சுழியை வைத்து குணங்களை அறியமுடியுமாம்..
இரட்டை சுழி
தலையில் ஆண்களுக்கு இரட்டை சுழி இருந்தால் அவர்களுக்கு இரண்டு திருமணம் நடக்கும் என்று கூறுவதுண்டு. ஆனால், இந்த கூற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளோ, தகவல்களோ கிடையாது.
பொதுவாக பலருக்கும் இப்படி இரட்டை சுழி இருக்காது. NHGRI ஆய்வின்படி உலக மக்கள் தொகையில் 5% பேருக்குத்தான் இரட்டை சுழி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல்படி ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது எனில் மரபணு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
ஜோதிடம் என்ன சொல்கிறது?
அவர்களுடைய தாத்தா, பாட்டி என முன்னோர்களுக்கு இப்படி இரட்டை சுழி இருந்தால் அதனால் இவர்களுக்கும் இரட்டை சுழி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஜோதிடப்படி, இரட்டை சுழி உள்ளவர்கள் நேரடியாக எதையும் பேசுபவர்கள். பொறுமையானவர்கள். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர்கள்.
இரக்க குணத்துடன் இருப்பார்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள் என சொல்கிறார்கள்.