பூஜையின் பொழுது பெண்கள் ஏன் தேங்காய் உடைக்கக்கூடாது தெரியுமா?

By Sakthi Raj May 10, 2026 07:39 AM GMT
Report

நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் பெண்கள் பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்தாலும் தேங்காய் உடைக்கும் பொழுது அதை ஆண்கள் தான் செய்வார்கள். நாம் இதை மரபாக அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம் தெரியாமல் பின்பற்றி வருகின்றோம். அப்படியாக, பூஜையின் பொழுது ஏன் பெண்கள் தேங்காய் உடைக்ககூடாது என்று பார்ப்போம்.

2026: ஜூன் 2 ஆம் தேதி நடக்கும் குரு பெயர்ச்சி.. 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்ட மழை?

2026: ஜூன் 2 ஆம் தேதி நடக்கும் குரு பெயர்ச்சி.. 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்ட மழை?

தேங்காய் உடைப்பது ஏன்?

பொதுவாக, தேங்காயை நாம் சுபகாரியங்களுக்கு மட்டும் அல்லாமல் அசுப காரியங்களுக்கும் உடைப்பது உண்டு. இவ்வாறு தேங்காய் உடைப்பதற்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கிறது. அதில் நம் முன்னோர்கள் தேங்காய் மனித உடலின் பிரதிபலிப்பு என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதனால் தேங்காய் உடைக்கும் பொழுது நம்முடைய கர்வம் அழிந்து நம்முடைய ஆன்மா மேன்மை அடைவதோடு தூய்மை அடையும் என்பது நம்பிக்கை. அப்படியாக, நாம் சுபகாரிய நிகழ்ச்சியின் பொழுது தேங்காய் உடைக்கும் பொழுது நமக்கு வரப்போகும் தடைகளை அவை நீக்கும் என்பது பொருள்.

பூஜையின் பொழுது பெண்கள் ஏன் தேங்காய் உடைக்கக்கூடாது தெரியுமா? | Reason Why Women Shouldnt Break Coconut In Pooja

பெண்கள் ஏன் தேங்காய் உடைக்கக் கூடாது?

நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் தேங்காய் முக்கண் கொண்ட சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறது. மேலும் தேங்காய்க்குள் இருக்கும் நீர் உயிராக கருதப்படுகிறது. அதாவது தேங்காய் என்பது மற்றொரு உயிரை தன்னுள் உருவாக்கும் ஆற்றல் உடைய தெய்வீக பொருளாகும்.

அப்படியாக, பெண் என்று எடுத்துக்கொள்ளும் பொழுது அவர்கள் தான் ஒரு உயிரை உருவாக்கும் தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆதலால், பெண்களுக்கு இணையாக கருதக்கூடிய இந்த தேங்காய் அவர்கள் உடைக்கும் பொழுது கருவை சிதைப்பதற்கு சமமாகவும் அது மகா பாவம் என்றும் ஆகமங்களில் சொல்லப்படுகிறது.

பூஜையின் பொழுது பெண்கள் ஏன் தேங்காய் உடைக்கக்கூடாது தெரியுமா? | Reason Why Women Shouldnt Break Coconut In Pooja

2026: அபார ஏகாதசி எப்பொழுது? பெருமாளின் அருள் பெற என்ன செய்யவேண்டும்

2026: அபார ஏகாதசி எப்பொழுது? பெருமாளின் அருள் பெற என்ன செய்யவேண்டும்

அதேசமயம் ஆண்கள் தேங்காய் உடைப்பது என்பது தங்களுக்குள் இருக்கும் "தான்" என்று அகங்காரத்தை உடைப்பதற்கு நிகராக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதன் "தான்" என்று அகங்காரத்தை கைவிடும் பொழுது தான் அவன் இந்த உலகத்தை சமமாக பார்க்க முயல்வான்.

மேலும், எப்பொழுது ஒரு மனிதன் தன்னுடைய அகங்காரத்தை விடுத்து பொறுப்புகளை புரிந்து கொள்கின்றானோ அப்பொழுது அவன் குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஒரு நல்ல மனிதனாக உருமாறுவான்.

இதனை உணர்த்தும் விதமாக தான் ஆண்களை தேங்காய் உடைக்க சொல்கிறார்கள். மேலும், அந்த குடும்பம் தழைத்து வளர வேண்டும் என்பதற்காகத்தான் பெண்கள் கைகளால் தேங்காய் உடைக்க கூடாது என்றும் சொல்கிறார்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US