2026: துலாம் ராசியினருக்கு இந்த ராசியினர் தான் எதிரியாம்.. யார் தெரியுமா?
ஜோதிடத்தில் ஏழாவது ராசியாக இருக்கக்கூடிய துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான். இவர் தான் சுகபோக வாழ்க்கைக்கு காரணியாக இருக்கிறார். அதைவிட முக்கியமாக துலாம் ராசியின் சின்னம் தராசு.
ஆக, இவர்கள் எப்பொழுதும் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் ஒரு கருத்தை முன் வைக்கும் பொழுது யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் நடுநிலையாக எடுப்பார்கள்.
மேலும், இந்த துலாம் ராசியினருக்கு ஒத்து வராத ராசியினர் மற்றும் அவர்களுக்கு கை கொடுக்கக் கூடிய ராசியினர் என்று சிலர் இருக்கிறார்கள்.
அப்படியாக, துலாம் ராசியினருக்கு ஒத்து வராத ராசியினர் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது சிம்ம ராசியினர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு மிதுன ராசியினர் ஒரு நல்ல நட்பாகவும் அதிர்ஷ்டம் கொடுக்க கூடியவராகவும் இருக்கிறார்கள்.
இவர்களை கூட வைத்துக்கொண்டு இவர்கள் காரியங்களை தொடங்கும் பொழுது எல்லா விதத்திலும் வெற்றிகள் கிடைக்கிறது. அதேபோல், துலாம் ராசியினருக்கு சிறந்த வாழ்க்கை துணை விருச்சிக ராசியினராக இருக்கிறார்கள்.
இவர்களை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்கும் பொழுது சண்டையில்லாத ஒரு சுமூகமான வாழ்க்கை இவர்களுக்கு கிடைக்கிறது. மேலும் துலாம் ராசிக்கு எந்த ராசியினர் பலம் பலவீனம் என்று பார்ப்போம்.