2026 ஜனவரி 1: வெற்றிகள் குவிய 12 ராசிகள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
ஆன்மீகத்தில் பரிகாரங்கள் என்பது சாதாரணமாக நாம் எடுத்துக் கூடாது. காரணம் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு பரிகாரங்களும் நமக்கு எதிர்பாராத நேரங்களில் ஒரு மிகப்பெரிய பலனை கொடுத்துவிடும்.
அப்படியாக புது வருடம் நாளை பிறக்க இருக்கின்ற நேரத்தில் 12 ராசிகளுமே எல்லா மக்களுமே தங்களுடைய புது வருடம் ஒரு சிறந்த வருடமாக இருக்க வேண்டும் என்று இறை வேண்டுதலோடு அவர்களுடைய தினத்தை தொடருவார்கள்.
அதோடு சேர்ந்து அவர்கள் குறிப்பிட்ட சில பரிகாரங்கள் செய்தார்கள் என்றால் நிச்சயமாக வாழ்க்கையில் சந்தித்து வருகின்ற தடைகள், தாமதங்கள், அவமானங்கள் நஷ்டம் இது எல்லாம் விலகி ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும்.
அந்த வகையில் 12 ராசிகளும் நாளை ஜனவரி 1 ஆம் தேதி அன்று காலை செய்ய வேண்டிய முக்கியமான பரிகாரங்கள் என்னவென்று பார்ப்போம்.

மேஷம்:
காலை எழுந்தவுடன் சூரிய பகவானுக்கு தண்ணீர் வைத்து வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்கள் மனதில் ஒரு தெளிவும் வாழ்க்கையில் எதையும் சாதிக்க கூடிய ஒரு நம்பிக்கையும் கிடைக்கும்.
ரிஷபம்:
இவர்கள் நாளைய தினம் முடிந்த வரை வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய இனிப்புகள் அல்லது உணவு பொருட்களை இவர்கள் பிறருக்கு தானம் வழங்கும்பொழுது இவர்கள் பொருளாதாரம் மற்றும் குடும்பம் சிறந்து விளங்கும்.
மிதுனம்:
இவர்கள் தினம் “ஓம் புதாய நம:”என்ற மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்தால் இவர்களுக்கு பேச்சுத் திறமை வலுப்படும். அது மட்டுமல்லாமல் முடிவெடுப்பதில் குழப்பங்கள் விலகும்.
கடகம்:
நாளைய தினம் வீடுகளில் ஒரு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தாலே இவர்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும். மனதில் தெளிவு பிறக்கும். உற்சாகம் உண்டாகும்.
சிம்மம்:
இவர்கள் நாளை முடிந்தவரை தங்க நிறத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை பிறருக்கு தானம் வழங்கலாம் அல்லது நீங்களே கூட சென்று உங்களுக்காக வாங்கிக் கொள்ளலாம். இது உங்களுக்கு ஒரு நல்ல ஆளுமையை பெற்றுக் கொடுக்கும்.
கன்னி:
இவர்கள் நாளை பசு மாட்டிற்கு உணவு அளித்தால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய ஆரோக்கிய குறைபாடுகள் எல்லாம் விலகி சுபம் உண்டாகும்.
துலாம்:
இவர்கள் வீடுகளில் ஊதுபத்தி அல்லது தூபம் போட்டு வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்கள் உறவு ரீதியாக சந்தித்து வருகின்ற கசப்புகள் எல்லாம் விலகும்.
விருச்சிகம்:
இவர்கள் கருப்பு எள் அல்லது கருப்பு நிறத்தில் உடைகளை தானம் செய்தால் இவர்கள் சந்தித்து வருகின்ற உணர்வு ரீதியான பாதிப்புகள் எல்லாம் விலகும்.
தனுசு:
ஆன்மீக ரீதியாக பகவத் கீதை அல்லது ஏதேனும் முக்கிய ஆன்மீக புத்தகங்களை நீங்கள் எடுத்து படிக்கும் பொழுது மனம் தெளிவாகும். வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பு உண்டாகும். அதுவே உங்களை உயர்த்தும்.
மகரம்:
இவர்கள் நாளை கடுகு எண்ணெயில் வானத்திற்கு கீழாக ஒரு விளக்கேற்றி வானத்தை பார்த்து வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுடைய கர்ம வினைகளானது முற்றிலுமாக விலகும்.
கும்பம்:
இவர்கள் நாளை ஏழை எளிய மக்களுக்கு முடிந்த ஆடைகள் அல்லது போர்வைகள் கொடுத்து வழிபாடு செய்தால் இவர்கள் பொருளாதார ரீதியாக சந்தித்து வருகின்ற தடைகள் மற்றும் மன ரீதியாக சந்தித்து வருகின்ற போராட்டங்கள் எல்லாம் விலகி மன அமைதி கிடைக்கும்.
மீனம்:
இவர்கள் நாளை அரச மரத்திற்கு அடியில் ஒரு விளக்கு ஏற்றியும் அரச மரத்திற்கு அடியில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்வது மட்டுமே இவர்களுடைய மனரீதியான பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல தெளிவை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |