வாங்கும் சம்பளம் கையில் தங்கவில்லையா? இந்த விஷயங்களை உடனடியாக செய்யுங்கள்

By Sakthi Raj Jul 29, 2026 03:30 PM GMT
Report

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கஷ்டம் என்பது எப்பொழுது வந்து செல்லக்கூடியது. அந்த வகையில், எவ்வளவு கடினமாக உழைத்தும் அந்த சம்பளத்தை அவர்களால் மாதம் முழுவதும் கைகளில் வைத்து செலவழிக்க முடியாத ஒரு நிலையும் மீண்டும் மீண்டும் கடன் வாங்கக்கூடிய நிலையையும் கொடுத்து விடுகிறது.

அவ்வாறான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு நாம் வாங்கும் சம்பளம் கைகளில் நிலைத்து நிற்பதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

வாங்கும் சம்பளம் கையில் தங்கவில்லையா? இந்த விஷயங்களை உடனடியாக செய்யுங்கள் | Remedies To Save Salary Money And Save Wealth

2026: பூச நட்சத்திரத்தில் அமரும் புதன் பகவான்.. குபேர ஐஸ்வர்யங்களை பெறும் ராசிகள் யார்?

2026: பூச நட்சத்திரத்தில் அமரும் புதன் பகவான்.. குபேர ஐஸ்வர்யங்களை பெறும் ராசிகள் யார்?

நாம் சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக இனிப்பு, பால் அல்லது மல்லிகை பூ போன்ற மங்களகரமான பொருட்களில் ஏதாவது ஒன்றை வாங்குவது செல்வம் கையில் நிலைத்து நிற்கவும் வருமானம் வீண் செலவாகாமல் இருப்பதற்கும் நமக்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

மேலும், சம்பளம் வாங்கியவுடன் முதல் நாளில் தேவையற்ற செலவுகளான மது அருந்துதல், அசைவ விருந்து வைப்பது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

வாங்கும் சம்பளம் கையில் தங்கவில்லையா? இந்த விஷயங்களை உடனடியாக செய்யுங்கள் | Remedies To Save Salary Money And Save Wealth

2026: ஆடி பெருக்கு எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

2026: ஆடி பெருக்கு எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

அதை போல், சம்பளம் வாங்கிய பிறகு உடனடியாக வண்டிக்கு பெட்ரோல் போட வேண்டிய நிலை இருந்தாலும் மங்களகரமான பொருட்களை வாங்கிய பிறகு போடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.

அதைவிட முக்கியமாக எவ்வளவு பரிகாரம் செய்தாலும் வாங்கிய சம்பளத்தை நாம் சேமித்து வைக்க தெரியவில்லை என்றால் நிச்சயம் பணம் கரைய தொடங்கும். அதோடு, பணத்தை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

இறுதியாக நல்ல காரியங்களுக்கு முழு மனதார நாம் செலவழிக்க கற்றுக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு நாம் தேவையான விஷயங்களுக்கு பணம் செலவு செய்யாமல் பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் அது அவை வீண் செலவுகளில் தான் முடியும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US