ஒருவரிடம் தர்க்கம் செய்வதற்கு முன்பு இதை கவனிக்கவும்
ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடைய மட்டும் அல்ல வாழ்க்கையில் உயர்வு பெற நமது நேரத்தையும் உடல் மற்றும் மன சக்தியையும் சரியாக பயண்படுத்துவது அவசியம்.
உலகில் எழும் பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கு காரணமே கருத்து முரண்பாடு தான், இந்த ஒன்றை சரி செய்து விடடால் உலகில் நிதி மன்றங்களுக்கும், மனநல காப்பாகத்திற்கும் வேலை இல்லாமல், போகும், கருத்து முரண்பாடு என்பது என்ன?
நீங்கள் நினைப்பதை அடுத்தவர் செய்யவில்லை அல்லது ஏற்கவில்லை எனும் போது முரண் ஏற்படுகிறது, ஒவ்வொருவரும் தன் எண்ணத்தை செயலாக்கம் செய்ய எண்ணி வாக்குவாதம் செய்ய ஆரம்பித்து முடிவில் சண்டையாகி முடிகிறது, அது நாள் கணக்கில் வருட கணக்கில் தலைமுறை தலைமுறையாக நிலைத்த பிரிவினை ஏற்படுத்திவிடுகின்றது.
ஆரம்பத்திலேயே சரி செய்து இருந்தால் இத்தனை பெரியதாய் வளர்ந்து இருக்காது என பின்னால் வருத்தப்பட்டு என்ன பயன்?
எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் ஒருவரிடம் உங்கள் எண்ணத்தை தெரிவிக்க ஆயத்தம் ஆகுவதற்கு முன் இந்த பதிவை ஒரு முறை மீள் பார்வை செய்து கொள்ளுங்கள்.
5 வகையான நபர்களிடம் பேசுவது வீன்
1 - அறிவு நிலையில் உயர்ந்தவர்கள்
2 - அறிவு நிலையில் குறைந்தவர்கள்
3 - சார்ந்து இருக்கும் மனிதர்கள்
4- முடிவெடுத்தபின் பேசுபவர்கள்
5 - உயர்வு தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்
1 - அறிவு நிலையில் உயர்ந்தவர்களிடம் தர்க்கம் செய்ய கூடாது
ஏன் என்றால் அவர்கள் அனுபவத்தில் ஆராய்ச்சியில் இருந்து உங்களுக்கு ஒரு கருத்தை சொன்னால் அதனை சீர் தூக்கி பார்க்கும் அளவு பக்குவம் நம்மிடம் இருக்காது, எனவே அவர்கள் தன் அளவில் பரிசோதத்து பார்த்து ஒன்றை சொன்னால் அதை கேட்டுக்கொள்ள வேண்டும் தர்கத்தில் ஈடுபட்டால் அவர்கள் மேற்கொண்டு உங்களுக்கு சொல்வதை நிறுத்திக் கொள்வர் உங்களுக்கு அவர்களின் அறிவு பகிர்வு கிடைக்காமல் போகும்.,
உதாரணம் :- ஒரு மாணவன் தான் தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்கூடத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற தலைப்பில் வாக்குவாதம் செய்வது போல
இப்போது அடுத்த சந்தேகம் எழும் அறிவு நிலையில் உயர்ந்தவர்களை எப்படி இனம் காண்பது?
அவர்களின் வார்த்தைகளும் அவர்களின் பழக்க வழக்கங்களும் மற்றும் அவர்களின் செயலே அவர்கள் எந்த மாதிரியான அறிவு நிலை கொண்டவர்கள் என்பதை காட்டிக்கொடுக்கும்
2 அறிவு நிலையில் குறைந்தவர்களிடம் தர்க்கம் செய்ய கூடாது
ஏன் என்றால் அறிவுரையோ ஆலோசனையோ கூறும் அளவுக்கு அவர்களுக்கு போதிய அனுபவம் கிடைத்து இருக்காது புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டதை போலவே எங்கேயோ கேட்டத்தையும் யாரோ சொன்னதையும் வைத்து கொண்டு அவர்கள் பேசி வருவார்கள் சொந்தமாக சிந்தித்து செயலாற்றும் திறன் இருக்காது., இவர்களிடம் தர்க்கம் செய்யும் போது நீங்கள் உங்கள் நிலையில் இருந்து தாழ்த்து போகிறீர்கள் என்று அர்த்தம்
அறிவு நிலையில் குறைந்தவர்களை எப்படி இனம் காண்பது?
தன் தேவைகளை பற்றி அதிகம் சிந்திப்பவர்களாக இருப்பார்கள், அருகில் இருக்கும் நபரின் மன நிலை எப்படி இருக்கும் என்ற அக்கரை கொஞ்சமும் இல்லாமல் இருப்பார்கள், சுகமாக இருக்க வேண்டும் எண்ணம் மேலோங்கி இருக்கும் தான் உடல் மற்றும் பொருட்கள் மீதும் கூட போதிய அக்கரை இருக்காது அவர்கள் நடவடிக்கைகள் வைத்து கணிக்கலாம்
3 சார்ந்து இருக்கும் மனிதர்களிடமும் தர்க்கம் செய்ய கூடாது
ஏன் என்றால் அவர்களுக்கு சுயமாக முடிவெடுக்கும் திராணி இல்லாதவர்களாக இருப்பார்கள் மேலும் அவர்களிடம் நீங்கள் எது பேசினாலும் அவர்கள் எதாவது பேசி சமாளித்து கொண்டே இருப்பார்ள் கடைசி வரை முடிவே வராது
இவர்களை எப்படி கண்டுபிடிப்பது., உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவதில் முனைப்பாக இருப்பார்கள், தன் மேல் குறை வந்துவிட கூடாது என்பதில் கவனமும் பயம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்
4 - முடிவு எடுத்த பின் பேசுபவர்கள்
ஒரு செயல் எப்படி செய்ய வேண்டும் அல்லது இதை மட்டும் தான் செய்ய போகிறேன் என ஏற்கனவே முடிவு செய்து விட்டு பேசுபவர்களிடம், பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என நினைத்து உரையாடுவது வீன்., என் என்றால் அவர்கள் முடிவு செய்து விட்டனர் நீங்கள் எப்படி பேசினாலும் அவர்கள் முடிவு செய்ததை தான் சொல்வார், செய்வார்., அவரது முடிவில் தவறு இருந்தாலும் அடுத்தவர் பேச்சையோ ஆலோசனையோ கேட்க மாட்டார்கள்
இவர்களை எப்படி கண்டுபிடிப்பது!என்ன சொன்னாலும் அவர்கள் முடிவில் இருந்து மாறாமல் உங்களை Convince செய்து கொண்டே இருக்கிறார்களா?
நீங்கள் எந்த தலைப்பில் பேசினாலும் அதற்கு அவர்களுக்கு தெரியவில்லை என்றாலும் தெரிந்தால் போல் பேசுவார்கள்.
இதில் இருந்தே கண்டுபிடித்து விடலாம்
5- உயர்வு தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்
இவர்கள் உங்களை உதாசீனப்படுத்தும் நோக்கில் மட்டுமே உங்களை பார்ப்பார்கள், மேலும் நீங்கள் எது கூறினாலும் உங்களுக்கு என்ன தெரிந்து விட போகிறது எனும் கண்ணோட்டத்திலே பேசுவார்கள் அல்லது அவர்கள் எல்லாம் உயர் அதிகாரிகள் அவர்களுக்கு என்ன புரியப்பபோகிறது என்ற மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆக இந்த 5 வகையான நபர்களை உங்களால் இனம் காண முடிந்தால் அவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை என எண்ணி நேரத்தையும் சக்தியையும் சேமியுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |