சிவபெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் எது?
நாம் தலைகீழாக நின்றாலும் சிவன் மனம் வைத்து அவரே வந்து நம்மை ஆட்கொண்டால் மட்டுமே அவரை உணர முடியும்.இல்லை என்றால் வேண்டுதலும் வெறும் கடமையாக அமையும்.
ஆனால்,அவனை அடைய ஒரு வழிமுறை உள்ளது.அவன் வருகின்ற பொழுது வரட்டும்.அது வரை நான் என்னுடைய வேண்டுதல் என்னும் கடமையை செய்வேன் என்பது தான்.இதனை தவம் என்று சொல்லலாம்.கடுந்தவத்திற்கு கிடைக்காத பதில் என்று ஒன்று இல்லை.
அப்படியாக,வழிபாடுகளில் இறைவனின் மந்திரங்கள் சொல்லி வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும்.மந்திரங்கள் சொல்லி வழிபடுவதால் நம்முள் இருக்கும் கெட்ட அதிர்வலைகள் நம்மை விட்டு விலகுகிறது.
இவ்வாறு தொடர்ந்து நாம் மந்திரங்கள் சொல்லி கொண்டே வர,நம்முடைய கர்ம வினைகள் விலகி இறைவனை நெருங்க ஓர் அற்புத வழியாக அமையும்.அதே போல் சிவ பெருமானின் மந்திரங்கள் அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்தவை.அதிலும் சிவனுக்குரிய ருத்ர காயத்ரி மந்திரம் நினைத்ததை சாதிக்கும் வல்லமை பெற்றது.
எவர் ஒருவர் தொடர்ந்து ருத்ர காயந்திரி மந்திரம் சொல்லி வருகிறாரோ அவர்கள் மனதில் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.
அதோடு மனதில் நம்பிக்கை,அசைக்க முடியாத பக்தி,யாரும் கலைக்க முடியாத தைரியம் பிறக்கும்.ஏன்,சிவ பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் இது என்றே சொல்லலாம்.
ருத்ர காயத்ரி மந்திரம்:
நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய
காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய
ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம
தீயவற்றை அழிக்க ரௌத்திரம் கொண்ட ருத்ரமூர்த்தியாகிய சிவ பெருமானை போற்றும் ருத்ர மந்திரம் இது.தனக்கு ஆயுள் காலம் 8 வயதே என்று தெரிந்த 7 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து ருத்ர காயத்ரி மந்திரம் ஜபித்து, சிவபெருமானின் வரம் பெற்று,நந்தி தேவன் ஆனார்.
இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரத்தை நாமும் விடாது ஜபித்தால் நடக்காது என்று உறுதி செய்யப்பட்ட காரியமும் சிவனின் அருளால் நல்ல படியாக முடிவு பெரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |