சபரிமலை ஐயப்பன் 108 சரண கோஷங்கள்: மாலை அணிந்த பக்தர்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்
கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து சபரிமலை சென்று வழிபாடு செய்வார்கள். இப்படியாக கார்த்திகை மாதம் முழுவதும் நம்முடைய காதுகளில் "சுவாமியே சரணம் ஐயப்பா" என்கின்ற இந்த சரண கோஷம் எங்கும் கேட்க முடியும்.
இந்த ஒரு சரண கோஷத்தை கேட்டாலே மனதில் பக்தியும் பரவசமும் உற்சாகமும் நமக்கு பொங்கி வரும். இந்த கலியுகத்தில் ஐயப்ப சுவாமியை மனதில் நினைத்தாலே நமக்கு ஒரு விதமான நம்பிக்கையும் தைரியமும் உற்சாகமும் பிறப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே ஐயப்ப சரண கோஷங்கள் ஒலிக்க துவங்கிவிடும்.
பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு பயணம் செல்ல தயாராகி விடுவார்கள்.

அப்படி இருக்க ஐயப்பனை போற்றக்கூடிய 108 சரணங்களை சொல்வது மிகவும் சிறப்பான வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது.
இந்த ஒவ்வொரு தருணத்திலும் ஐயப்பனுடைய பெருமை, அவருடைய அவதார சிறப்பு, வீரத்தன்மை, கருணை, அருட்தன்மை ஆகியவை போற்றப்படுகின்றன. மேலும், 108 சரணங்களை பக்தியுடன் உச்சரித்து வழிபாடு செய்பவர்களுக்கு மன அமைதியும், இறை நம்பிக்கையும் கிடைக்கும்.
அப்படியாக சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லக்கூடிய பக்தர்கள் சொல்ல வேண்டிய 108 சரண கோஷங்களை பற்றி பார்ப்போம்.

ஐயப்பன் 108 சரணங்கள்:
1. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
2. ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
3. ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
4. ஓம் சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா
5. ஓம் மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா
6. ஓம் வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
7. ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
8. ஓம் பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
9. ஓம் சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
10. ஓம் வனதேவத மாறே சரணம் ஐயப்பா
11. ஓம் துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா
12. ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
13. ஓம் அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
14. ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
15. ஓம் அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
16. ஓம் அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா
17. ஓம் அபாய தாயகனே சரணம் ஐயப்பா
18. ஓம் அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
19. ஓம் அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
20. ஓம் அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
21. ஓம் அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா
22. ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
23. ஓம் ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
24. ஓம் ஆனந்த ஜோதியே சரணம் ஐயப்பா
25. ஓம் ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா
26. ஓம் ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
27. ஓம் இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா
28. ஓம் இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
29. ஓம் ஏகபர சுக தாயகனே சரணம் ஐயப்பா
30. ஓம் இருதய கமல வாசனே சரணம் ஐயப்பா
31. ஓம் ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
32. ஓம் உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
33. ஓம் ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
34. ஓம் ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
35. ஓம் ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
36. ஓம் எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
37. ஓம் எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
38. ஓம் என் குல தெய்வமே சரணம் ஐயப்பா
39. ஓம் என் குருநாதனே சரணம் ஐயப்பா
40. ஓம் எருமேலி வாழும் கிராத சாஸ்தாவே சரணம் ஐயப்பா
41. ஓம் எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா
42. ஓம் எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
43. ஓம் ஏற்றுமானூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
44. ஓம் ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
45. ஓம் ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
46. ஓம் ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
47. ஓம் ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
48. ஓம் ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
49. ஓம் ஓம்கார பரபிரம்மமே சரணம் ஐயப்பா
50. ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
51. ஓம் கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
52. ஓம் கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா
53. ஓம் கருணா சமுத்திரமே சரணம் ஐயப்பா
54. ஓம் கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா
55. ஓம் சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா
56. ஓம் சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
57. ஓம் சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
58. ஓம் சரண கோஷ பிரியனே சரணம் ஐயப்பா
59. ஓம் சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
60. ஓம் ஷாம்புகுமாரனே சரணம் ஐயப்பா
61. ஓம் சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
62. ஓம் சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
63. ஓம் சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
64. ஓம் ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா
65. ஓம் தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
66. ஓம் நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
67. ஓம் நர்த்தன பிரியனே சரணம் ஐயப்பா
68. ஓம் பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
69. ஓம் பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
70. ஓம் பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
71. ஓம் பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
72. ஓம் பக்த வத்சலனே சரணம் ஐயப்பா
73. ஓம் பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
74. ஓம் பம்பா வாசனே சரணம் ஐயப்பா
75. ஓம் பரம தயாளனே சரணம் ஐயப்பா
76. ஓம் மணிகண்டப் பொருளே சரணம் ஐயப்பா
77. ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
78. ஓம் வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா
79. ஓம் கானக வாசனே சரணம் ஐயப்பா
80. ஓம் குளத்துப்புழை பாலகனே சரணம் ஐயப்பா
81. ஓம் குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
82. ஓம் கைவல்ய பாத தாயகனே சரணம் ஐயப்பா
83. ஓம் ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
84. ஓம் சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
85. ஓம் சேவிப்போருக்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
86. ஓம் துஷ்டர் பயம் நீக்குவோனே சரணம் ஐயப்பா
87. ஓம் தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
88. ஓம் தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
89. ஓம் தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
90. ஓம் நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா
91. ஓம் நெய்யபிஷேக பிரியனே சரணம் ஐயப்பா
92. ஓம் பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
93. ஓம் பாப சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
94. ஓம் பாயாசன்ன பிரியனே சரணம் ஐயப்பா
95. ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
96. ஓம் வரப்பிரதாயகனே சரணம் ஐயப்பா
97. ஓம் பாகவதோத்தமனே சரணம் ஐயப்பா
98. ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
99. ஓம் மோகினி சுதனே சரணம் ஐயப்பா
100. ஓம் மோகன ரூபனே சரணம் ஐயப்பா
101. ஓம் வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
102. ஓம் வீர மணிகண்டனே சரணம் ஐயப்பா
103. ஓம் சத்குருநாதனே சரணம் ஐயப்பா
104. ஓம் சர்வ ரோக நிவாரக மூர்த்தியே சரணம் ஐயப்பா
105. ஓம் சச்சிதானந்த சொரூபியே சரணம் ஐயப்பா
106. ஓம் சர்வாபீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா
107. ஓம் சாசுவத பதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
108. ஓம் பதினெட்டாம் படிக்குடைய நாதனே சரணம்
ஐயப்பா சுவாமியே
சரணம் ஐயப்பா!
சுவாமியே சரணம் ஐயப்பா!
சுவாமியே சரணம் ஐயப்பா!
பொறுப்புத் துறப்பு:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |