பிறந்தது கார்த்திகை மாதம்.., விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.
குறிப்பாக மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1ஆம் திகதி அன்று ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
அப்போது இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 48 நாட்களும், மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று 16ஆம் திகதி திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1ஆம் திகதியான இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம்.
கார்த்திகை மாதத்தையொட்டி இரண்டு நாட்களுக்கு முன்பே சபரிமலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |