சனிபகவான் அருளால் புத்தாண்டில் நன்மை பெற போகும் 3 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் நிதி கடவுளாக கருத்தக்கூடியவர் சனிபகவான்.இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றும் சனி பகவான் இன்று தன்னுடைய நட்சத்திரத்தை மாற்ற உள்ளார்.அப்படியாக சதயம் நட்சத்தில் இருக்கும் பூரட்டாதி நட்சத்திற்கு சனி பகவான் இடம்பெயர்கிறார்.
இந்த நட்சத்திர மாற்றத்தால் சில ராசியினருக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது. அந்த ராசிகள் யார் என்பதை பார்ப்போம்.
மகரம்:
மகர ராசியினருக்கு சனியின் நட்சத்திர மாற்றம் மிகவும் ஆதாயமாக அமைய போகிறது.இந்த காலத்தில் தொழிலில் அவர்கள் வேண்டாம் என்று சொன்னாலும் அளவு கடந்த லாபம் உருவாகும்.பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.பொன்,பொருள் சேர்க்கை உருவாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு சனியின் நட்சத்திரம் மாற்றம் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்கும்.பல வருடம் மனதை வருடிய துன்பம் முழுவதுமாக விலகி செல்லும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும்,அரசாங்க பணியில் அமர வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு நல்ல பதவியும் கிடைக்கும்.போட்டி தேர்விற்கு தயார் ஆகும் மாணவர்களுக்கு இது ஒரு வசந்த் காலம்.வெற்றி நிச்சயம்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி மிக பெரிய மாற்றத்தை கொடுக்க போகிறது.பல நாள் தோல்வியை சந்திக்க இவர்களுக்கு இனி பார்க்க கூடிய வெற்றி மிக பெரிய நம்பிக்கையை கொடுக்கும்.திருமண பாக்கியம் கைகூடும்.மருத்தவ துறையில் இருப்பவர்களுக்கு மேல் படிப்பு படிக்கச் சிறந்த காலம் இது.புதிய சொத்து, வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |