நாம் ஒரு பொழுதும் பிறர் செய்யும் இந்த செயலை மட்டும் தடுக்கக்கூடாது
உலகத்தில் உள்ள சிறந்த விஷயங்களில் ஒன்று,நாம் பிறர்க்கு அளிக்கும் தானம்.இந்த தானம் ஆனது முழுமனதாரா அக மகிழ்வோடு செய்யவேண்டும்.ஊருக்காக,பெருமைக்காக ஒரு பொழுதும் தானம் செய்யக்கூடாது.
அதே போல் நாம் எதையும் ஒருவரிடம் எதிர்பார்த்து தானம் வழங்க கூடாது.குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் துன்பம் அடைகிறார்,அவருக்கு அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய உதவியோ,தானமோ மிக பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்றால் நிச்சயம் யோசிக்காமல் நாம் செய்து விடவேண்டும்.
அவ்வாறு செய்யும் பொழுது நம் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடையும்,அதை பெற்று கொண்டவர் மகிழ்வால் நமக்கு அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். மேலும் தானம் செய்வது என்பது தனிப்பட்ட மனிதரின் விருப்பம்.அதை பிறரிடம் கலந்து கொண்டும்,ஆலோசனை பெற்று செய்வதும் கூடாது.
நாம் பறவைகள் விலங்குகளுக்கும் தானம் செய்யலாம்.அதாவது முடிந்த அளவு அவர்களுக்கு தண்ணீர் வழங்குவது,உணவு அளிப்பது,மருத்தவம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபடும் பொழுது நம்முடைய கர்மவினைகள் பலமடங்கு குறைந்து விடுகிறது.
அதே போல் கர்மவினை குறைக்கவேண்டும் என்று இதை எல்லாம் ஒரு வேலையாக செய்யாமல்,தானம் செய்வதின் அற்புத நிலையை உணர்ந்து,சக உயிரினம் துன்புறும் பொழுது,நம்மால் முடிந்தாலும் முடியாவிட்டாலும் அவர்களுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து கைகொடுப்பது நம்முடைய பிறப்பின் கடமை என்று உணர்ந்து செய்ய வேண்டும்.
அப்பொழுது தான் நாம் செய்யும் தானம் முழுமை அடையும்.பிரபஞ்சத்தின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.அப்படியாக,இவ்வளவு நல்ல விஷயமான தானம் வழங்குவதை நாம் ஒரு பொழுதும் ஒருவரை செய்யவிடாமல் தடுக்க கூடாது.
அது மிக பெரிய பாவம் ஆகும்.இவ்வாறு செய்யும் பொழுது நம்முடைய கர்மவினைகள் இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.பிறகு நாம் வாழ்க்கையில் எந்த காரியம் செய்தாலும் தடங்கல் உண்டாகும்.சிறிய விஷயத்தை கூட செய்து முடிக்க மிகவும் துன்பப்படும் சூழ்நிலை ஏற்படும்.
ஆக முடிந்தால் தானம் செய்வோம்,இல்லை என்றால் ஆறுதல் சொல்லுவோம்.ஆனால் ஒருபொழுதும் ஒருவருக்கு சென்றடைய கூடிய உதவியையும் தானத்தையும் தடுக்காமல் வாழ்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |